பயனர்கள் தங்களின் முதன்மை Gmail முகவரியை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு புதிய வசதியை கூகுள் செவ்வாய்க்கிழமை அறிவித்தது
ஜிமெயில் முகவரியை மாற்றிக்கொள்ள கூகுள் அனுமதிக்காததால்
பயனர்கள் தங்களின் முதன்மை Gmail முகவரியை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு புதிய வசதியை கூகுள் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதற்கு முன்பு, கணக்கு உருவாக்கப்பட்டவுடன் பயனர்கள் தங்களின் பிரதான ஜிமெயில் முகவரியை மாற்றிக்கொள்ள கூகுள் அனுமதிக்காததால், இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக அமைந்துள்ளது. மவுண்டன் வியூவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின்படி, இது ஜிமெயில், கூகுள் காலண்டர், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் உட்பட, ஒரு பயனரின் முழுமையான கூகுள் அக்கவுண்டிற்கு பொருந்தும். இருப்பினும், இந்த வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் புதிய அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் ஒரு புதிய @gmail.com பயனர்பெயரைத்தேர்வு செய்துகொள்ளலாம், அதே சமயம் உங்களுடைய பழைய மின்னஞ்சலும் தொடர்ந்து செயல்படும்.
உங்கள் பழைய ஈமெயில் முகவரிக்கு நீங்கள் தொடர்ந்து ஈமெயில்களைப் பெறலாம் . லோகின்செய்வதற்க்கு ஈமெயில் அனுப்புவதும் பழைய முகவரியிலிருந்து தொடரும். உங்கள் , டேட்டாக்கள்,ஈமெயில் மற்றும் ஹிஸ்டரி அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். மொத்தத்தில், 3 முறை வரை மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்படும். தேவைப்பட்டால், பழைய முகவரிக்கும் திரும்பிச் செல்லலாம்.
பழைய ஈமெயில்களுக்கு என்னவாகும்?
நீங்கள் ஒரு புதிய பயனர்பெயரை அமைக்கும்போது, உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரி ஒரு மாற்றுப் பெயராக (alline) மாறும். இதன் பொருள், உங்கள் தொடர்புகள், பைல்கள் , போட்டோக்கள் மற்றும் சப்ஸ்க்ரிப்சன் அனைத்தும் அப்படியே இருக்கும். உங்கள் ஜிமெயில், யூடியூப், டிரைவ் மற்றும் மேப்ஸ் கணக்குகளும் பாதிக்கப்படாது.
இது எந்தப் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
பழைய அல்லது தொழில்முறை அல்லாத ஈமெயில் யூசர் பெயர் , புதிய மற்றும் சிறந்த ஒன்றாக மாற்ற விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை, ஜிமெயில் ஒரு புதிய கணக்கை உருவாக்குவதற்கோ அல்லது மாற்றுப்பெயரைச் சேர்ப்பதற்கோ மட்டுமே விருப்பத்தை வழங்கியது, ஆனால் ப்ரைமரி ஈமெயில் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கவில்லை.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.