Apple அதன் முதல் ஸ்டோர் நொய்டாவில் திறக்கப்பட்டுள்ளது மற்றும் மொத்த இந்தியாவில் இது 5 கடையாகும்.இந்த Apple அதன் புதிய ஸ்டோர் நோய்டாவின் DLF Mall of India யில் கொண்டு வரப்பட்டுள்ளது மற்றும் இது அனைத்தையும் விட மிக பெரிய ஸ்டோர் ஆகும், மேலும் கஸ்டமர்கள் தங்களுக்கு பிடித்த மற்றும் அனைத்து பொருட்களையும் வாங்கலாம், ஐபோன் 17 சீரிஸ் , சமீபத்திய மேக்புக்குகள், ஐபேட்கள் மற்றும் அக்சஸ்ரிஸ் உள்ளிட்ட சேவைகள் மற்றும் அனுபவங்கள் பெறலாம் .
சர்வதேச டேட்டா கழகத்தின் டேட்டாக்கள் , இந்தியாவில் ஆப்பிளின் வெற்றிக்கு சான்றாகும். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், ஆப்பிள் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை விற்று, நாட்டின் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியது, Xiaomi (Poco தவிர்த்து) மற்றும் Realme ஆகியவற்றை விஞ்சியது.
இந்த பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரில் அதிக பணம் செலவளிக்கப்பட்டுள்ளது , ஒவ்வொரு ஸ்கொயர் பீட் படி 263.15ரூபாய் செலவாகியுள்ளது, அதாவது இதில் ஒவ்வொரு மாதமும் 45.3 லட்சம் வாடகை தர வேண்டி இருக்கும், இது வருடாந்திர கணக்கு படி பார்த்தால் 5.4 கோடி ரூபாய் ஆகும், அறிக்கையின் படி இது 11 வருடத்திற்க்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் முதல் மாதத்தில் எந்த வாடகை இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க Lava யின் புதிய போன் அறிமுகம் கம்மி பட்ஜெட்டில் இருக்கும் பல சூப்பர் அம்சம்
இந்த புதிய கடையில் பொதுமக்களுக்காக திற்றக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 80 நல்ல பயிற்சசி அளிக்கப்பட்டவர்களை சேர்க்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சமீபத்திய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் வாட்ச் அல்ட்ரா 3, புதிய ஐபேட் ப்ரோ மற்றும் M5 சிப் மூலம் இயக்கப்படும் 14-இன்ச் மேக்புக் ப்ரோ ஆகியவற்றையும் ஆராயலாம். டிரேட்-இன், நிதி விருப்பங்கள் மற்றும் ஆன்லைன் ஆர்டர்களுக்கான ஆப்பிள் பிக்அப் உள்ளிட்ட ஆப்பிளின் ரீடைளர் சேவைகளும் கிடைக்கின்றன.
நிறுவனம் ஒவ்வொரு கேஜெட்டிற்கும் தனித்தனி பிரிவுகளை உருவாக்கியுள்ளது. மற்ற ஆப்பிள் கடைகளில் உள்ள அதே சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் நொய்டா கடையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். நிறுவனம் விரைவில் மற்ற நகரங்களிலும் ஆப்பிள் கடைகளைத் திறக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.