App Store expands support to 11 new languages including telugu language
Apple அதன் இந்திய கஸ்டமர்களுக்கு மிக பெரிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது, அதாவது தனது இந்திய கஸ்டமர்களுக்கு அனைத்து மொழிகலயும் சென்று அடைய வேண்டும் என்று ஆப்பிளின் App Store யில் பல புதிய மொழிகளை சேர்த்துள்ளது அதாவது இது கடந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள புதிய மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கியது, அதனை தொடர்ந்து இப்பொழுது தமிழ் உட்பட 11 மொழிகளின் சப்போர்ட் கிடைக்கிறது மேலும் இங்கு இந்தியா முழுக்க என்ன என்ன மொழிகள் சப்போர்ட் செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple அதன் டெவலப்பர் வெப் பக்கத்தில் ஒரு அதிகாரப்பூர்வப் பதிவின் மூலம் புதிய மொழிகளுக்கான சப்போர்ட் ஆப்பிள் அறிவித்துள்ளது. அவர்கள் மொத்தம் 11 புதிய மொழிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர், அவற்றில் 10 மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழிகளாகும், ஸ்லோவேனியன் மொழி இதற்கு விதிவிலக்காகும். இந்த நடவடிக்கையின் மூலம், ஆப் ஸ்டோர் இப்போது மொத்தம் 50 மொழிகளை சப்போர்ட் செய்கிறது என்பதை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இதை தவிர தனது ப்ளாக் போஸ்ட்டில் Apple யின் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் உலகளவில் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக App ஸ்டோரில் இப்பொழுது 11 புதிய இந்திய மொழிகளை கொண்டு வந்துள்ளது, ஆக மொத்த இதில் 50 மைகள் சப்போர்ட் செய்யும்.
நீங்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உங்கள் சொந்த ஆப்களை உருவாக்கி வெளியிட்டு, மேலும் லோக்கல் மொழிகளைச் சேர்க்க விரும்பினால், ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்த புதிய மொழிகளுடன் டெவலப்பர் டூல்களை திருத்தியுள்ளது. தங்கள் வெப் யின் , டெவலப்பர்கள் இனி இந்த புதிய மொழிகளுக்கு லோக்கல் மெட்டாடேட்டாவை வழங்க முடியும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:RBI NEW rule: டிஜிட்டல் பேமன்ட் மிக பெரிய மாற்றம் நாளை முதல் ஆரம்பம் மாற்றத்திற்கு காரணம் என்ன?
மெட்டாடேட்டாவில் ஆப்யின் பெயர், விளக்கம், ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் போன்றவை அடங்கும். ஆப்பிளின் கூற்றுப்படி, ஒரு டெவலப்பர் தனது மெட்டாடேட்டாவை உள்ளூர்மயமாக்கும்போதெல்லாம், அது பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சாத்தியமான பயனர்களுக்குத் தனது ஆப்பை பொருத்தமானதாக மாற்ற உதவுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக, அது அவர்களின் பிஸ்னஸ் வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும், ஐபோன்/ஐபேட்ஓஎஸ்/மேக்ஓஎஸ்/வாட்ச்ஓஎஸ் ஆகிய ஒவ்வொரு தளத்திற்குமான அடுத்த வெர்ஷனை சமர்ப்பிக்கும்போது, டெவலப்பர்கள் லோக்கல் மெட்டாடேட்டாவைச் சேர்க்க முடியும் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது. ஆப்யின் மார்கெட் பக்கங்களில் சேர்க்கக்கூடிய புதிய லோக்கல் ஆப் ஸ்டோர் பேட்ஜ்களையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.