Amazon Great Summer Sale 2026
Amazon Great Summer Sale 2026: அமேசான் விற்பனை மீண்டும் வந்துவிட்டது! அந்நிறுவனம் தனது பிரபலமான கிரேட் சம்மர் சேல் 2026-க்கான வெளியிட்டு, விற்பனை தேதியையும் அறிவித்துள்ளது. இந்த வருடாந்திர விற்பனையானது, கோடை காலத்தில் முக்கியப் பொருட்களுக்குக் குறிப்பிடத்தக்க டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த ஆபரின் கீழ் ஸ்மார்ட்போன், TV ,லேப்டாப் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் விற்பனை தேதி மற்றும் ஆபர் தகவல் பார்க்கலாம் வாங்க.
Amazon Great Summer Sale 2026 விற்பனை மே 8 அன்று தொடங்கும். அமேசான், பிரைம் சந்தாதாரர்களுக்கு மற்ற பயனர்களுக்கு முன்பாகவே சலுகைகளை வாங்கும் வாய்ப்பை வழங்கக்கூடும். மேலும், அந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளில் முன்விற்பனைச் சலுகைகளையும் முன்கூட்டிய தள்ளுபடிகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது.
HDFC பேங்க் கார்ட்களை பயன்படுத்தும்போது, வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடித் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று அமேசான் உறுதி செய்துள்ளது. மேலும், அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம், வாங்குபவர்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், வட்டியில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் டீல்களை எதிர்பார்க்கலாம். சில டீல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்குதல்களுக்கு ரூ.1,250 கேஷ்பேக் அல்லது ரூ.2,500 வரையிலான சேமிப்பு போன்ற நேரடித் தள்ளுபடிகள் அடங்கியிருக்கலாம்.
இதையும் படிங்க வேற லெவல் ஒரே அடியாக ரூ,57,509 குறைப்பு 725Watt ZEBRONICS Juke BAR 9900 Soundbar தரமான சவுண்ட் உடன் சினிமா தியேட்டர்
Samsung, Xiaomi, மற்றும் iQoo போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு மற்றும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் அக்சஸ்ரிஸ் தள்ளுபடிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ஏர் கண்டிஷனர்கள், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற ஹோம் அப்ளயன்ஸ் குறிப்பிட்ட கால சலுகைகளின் கீழ் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் ஸ்மார்ட் டிவிகள், ஆடியோ பொருட்கள் மற்றும் smartwatch போன்றவைக்கு மிக சிறந்த சலுகைகளையும் அறிவித்துள்ளது.
ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பிரிவுகள்,மற்றும் காம்போ டீல்களுடன் இந்த விற்பனையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.