ஆதாருடன் பான் கார்ட் லிங்க் செய்வதற்க்கு கடைசி நாள்.ஜூன்30, எப்படி லிங்க் செய்வது தெரிஞ்சிக்கோங்க

ஆதாருடன் பான் கார்ட் லிங்க் செய்வதற்க்கு கடைசி நாள்.ஜூன்30, எப்படி லிங்க் செய்வது தெரிஞ்சிக்கோங்க
HIGHLIGHTS

ஆதாருடன் பான் கார்டை லிங்க் செய்வதற்கான கடைசி நாள் தற்பொழுது நெருங்கியுள்ளது,

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்க்கு கடைசி நாள் மார்ச் 30, 2023

ஆதாருடன் பாண் கார்ட் எப்படி லிங்க் செய்வது

ஆதாருடன் பான் கார்டை லிங்க் செய்வதற்கான கடைசி நாள் தற்பொழுது நெருங்கியுள்ளது, அதாவது  ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்க்கு கடைசி நாள் மார்ச்  30, 2023 லிருந்து ஜூன் 30 2023 வரை அதிகரிக்கப்பட்டிருந்தது, அதாவது  நீங்கள் ஜூன் 30 தேதிக்குள் லிங்க் செய்யவில்லை என்றால், உங்கள் பான் கார்டின் மூலம் எந்த வேலையும் செய்ய முடியாமல் செயலிழந்து போகிவிடும்.

ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்கவில்லை என்றால்,, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது  ஆதார் அப்ளிகேஷனில்  இருக்கும்  என்ரோல்மெண்ட் ஐடியை குறிப்பிடலாம்.

ஆதாருடன் பாண் கார்ட் எப்படி லிங்க் செய்வது 

  1. இன்கம் டேக்ஸ் – https://incometaxindiaefiling.gov.in/  போர்ட்டலைத் திறக்கவும் பிறகு  அதற்குள் பதிவு செய்யவும்.
  2. உங்களின் cஐடி, பாஸ்வர்ட் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு லோகின் செய்யவும்.
  3. லொகின் செய்த பின் ஒரு பாப் அப் விண்டோ தோன்றும், உங்கள் பான் நம்பருடன் ஆதாரை இணைக்கும்படி கேட்கும். இல்லையெனில், மெனு பாரில் உள்ள 'ப்ரொபைல் செட்டிங்ஸ்' என்பதற்குச் சென்று, 'லிங்க் ஆதாரில்' கிளிக் செய்யவும்.
  4. இ) PAN விவரங்களின்படி பெயர் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தகவல்கள் ஏற்கனவே இ பில்லிங் போரட்டலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  5. உங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பான் விவரங்களை ஸ்க்ரீனில் பார்த்து வெரிஃபை செய்து கொள்ள வேண்டும். அதி ஏதாவது தவறு  இருந்தால், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரி செய்ய வேண்டும்.
  6. விவரங்கள் சரியாக இருந்தால்,, உங்கள் ஆதார் நம்பரை உள்ளிட்டு, "இப்போது லிங்க் " ஆதார் பட்டனை கிளிக் செய்யவும்.
  7. உங்களின் ஆதார் லிங்க் செய்யப்பட்டவுடன் ஒரு பாப்-அப் மெசேஜ் வரும் அதில் உங்களின் ஆதார் கார்ட் வெற்றிகரமாக லிங்க் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
  8. உங்கள் PAN மற்றும் ஆதாரை லிங்க் நீங்கள் https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ யில் பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo