கொரோனா வைரஸ் காரணமாக 500 கோடி டாலர்கள் இழப்பை சந்தித்தது Ford

ஃபோர்டு மோட்டார் கோ நிறுவனம் இரண்டாவது காலாண்டு இழப்பு 500 கோடி டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் காலாண்டு இழப்பு 200 கோடி டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை இழப்புக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பே காரணமாக கூறப்படுகிறது.

தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முதன்மை அதிகாரிகளின் ஊதியத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. இதுதவிர எதிர்கால திட்டங்கள் சார்ந்த பணிகளையும் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி இருக்கிறது. 

வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும், நிறுவனத்தின் கையிருப்பு தொகையை கொண்டு இந்த ஆண்டு இறுதி வரை சமாளிக்க போதுமானதாக இருக்கும். எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான வருவாய் கணிப்புகளை வெளியிடுவது சரியானதாக இருக்காது என ஃபோர்டு நிறுவன மூத்த நிதி அலுவலர் டிம் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார். 

இதன் காரணமாக ஃபோர்டு தானியங்கி வாகன சேவைகள் ஓராண்டு தாமதமாக வெளியாக இருக்கிறது. இதுதவிர ரிவியன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க இருந்த ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனத்திற்கான பணிகளையும் ஃபோர்டு நிறுத்தி வைத்திருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :