5 solid reasons to watch vijay sethupati's Maharaja
மக்கள் நாயகன் விஜய் சஐதுபதி நடிப்பில் வெளிவந்த இந்தியாவில் மிக பெரிய ஹிட் அந்த வகையில் இந்த திரைப்படம் சீனாவையும் விட்டுவைக்கவில்லை இந்த எக்ஷன் திரைப்படம் நவம்பர் 29 அன்று சீனாவில் 40,000 வெள்ளி திரையில் வெளியிடப்பட்டது. திரைப்படம் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தைக் கண்டது. அதாவது சீன பாக்ஸ் ஆபிஸில் இந்தியப் படங்களுக்கான சாதனையைப் படைக்க இந்தப் படம் நிச்சயம் போனஸ் பாயிண்டாக இருக்கும். சீனாவில் பாக்ஸ் ஆபிஸில் இதே வேகத்தை தொடர்ந்தால் மகாராஜா விரைவில் 100 கோடி கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
Sacnilk படி, படம் 8 நாளில் ரூ 10.60 கோடி (USD 1.25 மில்லியன்) சம்பாதித்தது. ஆகமொத்தம் சீனா கலெக்சன் ரூ,56.80கோடி (USD 6.71 million) ஆகும். உலகளவில் இந்த தமிழ் படத்தின் கலெக்சன் ரூ, 162.93 மற்றும் வெளிநாடுகளில் மட்டும் இந்த படம் ரூ,76.10கோடியை வசூல் செய்தது, மேலும் இந்தியாவில் மாகரஜா வசூல் 72.41கோடி அதாவது ஆகமொத்தம் கலெக்சன் ரூ, 81.83 கோடியை வசூல் செய்தது.
மகாராஜாவின் மொத்த பட்ஜெட் ரூ,20 கோடியில் எடுக்கப்பட்டது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார் மற்றும் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இப்படத்தை தயாரிப்பில் வெளிவந்தது.
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் அதிரடி திரில்லர் கலந்த ஆக்ஷன் திரைப்படமாகும்.இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இது விஜய் சேதுபதியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 50வது படமாகும் இந்த எக்ஷன் திரைப்படம் தற்பொழுது Netflix யில் தமிழ் உட்பட ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு, மற்றும் கன்னடா மொழியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
நாயகன் விஜய் சேதுபதி தான் நடத்திவரும் சலூன் கடையில் உள்ள தனது லட்சுமி-யை காணவில்லை என போலீஸாரிடம் வழக்கு கொடுக்கிறார். போலீஸ் அதனை விசாரிக்க லஞ்சம் கொடுத்து அவசரப்படுத்துகிறார். விஜய் சேதுபதியின் வழக்கை விசாரித்த போலீஸ் பெரிய அளவில் பல குற்றங்களும் பல திடுக்கிடும் விஷயங்களை கண்டு பிடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் கடையில் இருந்த லட்சுமி என்ன? சலூன் பெட்டியா, ஏதேனும் பொருளா, உயிர் உள்ள நபரா? என்பதே இப்படத்தின் கதைகளம் நகருகிறது .
இதையும் படிங்க: Pushpa 2 இன்று எங்கெல்லாம் எப்படி புக் செய்யலாம் மற்றும் HD குவளிட்டியில் Telegram யில் லீக்