ராஞ்சான திரைப்படத்தை AI மூலம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதால் மோதல் தீவிரமடைந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் எல் ராய்க்குப் பிறகு , நடிகர் தனுஷ் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ஆப்பை கடுமையாக சாடியுள்ளார், மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஞாயிற்று கிழமை அன்று தனுஷ் சோசியல் மீடியா பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டார் அதில் AI மூலம் எடிட் செய்யப்பட்டதை முழுமையாக கண்டிப்பதாகவும் மேலும் அக்கதைக்கான உணர்வை மாற்றியுள்ளது என கூறினார்.
இதில் தலைப்பு For the love of cinema என்று போட்டு தனுஷ் AI பயன்படுத்தி கிளைமேக்ஸ் மாற்றியது முற்றிலும் என்னை தொந்தரவு செய்தது, அதாவது அப்படத்திர்க்கான ஆனமஅவையே இது சாகடித்து விட்டதாக கூறினார மற்றும் இதற்க்க்காக முற்றிலும் மறுப்பு தெரிவிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க:தலைவன் தலைவி OTT ரிலீஸ் தகவல் அப்டேட் எப்போ எங்கு வருது முழுசா பாருங்க
“இது நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்ட படம் அல்ல. திரைப்படங்கள் அல்லது கன்டென்ட் மாற்ற AI ஐப் பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் மிகவும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமாகும். இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.