e-EPIC வாக்காளர் அடையாள அட்டை என்றால் என்ன ? மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி>

HIGHLIGHTS

e-EPIC வாக்காளர் அட்டை என்றால் என்ன

e-EPIC வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி

Voter id உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்று பார்க்கலாம்

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை இந்திய குடிமகனாக ஒருவர் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வாக்காளர் அடையாளத்தைப் பொருத்தவரை, ஆவணம் அடையாளச் சான்றாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனை வாக்களிக்கவும் அனுமதிக்கிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கம் தற்காலத்தில் அதிகரித்து வருவதாலும், அரசாங்கம் பல மேம்பட்ட டிஜிட்டல் முறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பான e-EPIC (Electronic Electoral Photo Identity Card), அதாவது எலெக்ட்ரோனிக் வோட்டர் ஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

e-EPIC வாக்காளர் அட்டை என்றால் என்ன

இது அடிப்படையில் அசல் வாக்காளர் அடையாள அட்டையின் திருத்த முடியாத போர்ட்டபிள் ஆவண வடிவம் (PDF) கொண்ட பதிப்பாகும். இது திருத்த முடியாதது என்பதால், இது ஒரு பாதுகாப்பான ஆவணம் என்றும் கூறலாம். இது தொலைந்து அல்லது கிழிந்து போக வாய்ப்பில்லை.

வாக்காளர் அடையாள அட்டையின் PDF பதிப்பை தனிநபரின் அடையாள சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையின் ஆதாரத்தை PDF ஆக மொபைல் ஃபோனில் அல்லது டிஜி லாக்கரில் சேமித்து வைத்து அணுகலாம்.

e-EPIC வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி

  • http://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்
  • வாக்காளர் பக்கத்தில் உள்நுழையவும்
  • மெனுவில் Download e-EPIC என்பதைக் கிளிக் செய்யவும்
  • வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை உள்ளிடவும்
  • உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
  • உங்கள் மொபைலில் கோப்பை பதிவிறக்கம் செய்து சேமிக்க Download e-EPIC என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்று பார்க்கலாம்

  • e-KYCஐ கிளிக் செய்யவும்
  • Face liveness சரிபார்ப்புக்குச் செல்லவும்
  • KYCஐ முடிக்க உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
  • KYCஐ முடிக்க, உங்களுக்கு கேமரா அணுகலை கேரலாம்
  • Submit கிளிக் செய்துவிட்டால், உங்கள் மொபைல் எண் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும்
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :