தனுஷின் ‘தி கிரே மேன்’ஹாலிவுட் பாடம் ட்ரைலர் வெளியீடு, கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’
இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது
தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
Surveyஇதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள்.
நேற்று வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இந்நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் டிரைலரை தனுஷ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிரைலரில் அதிகமான காட்சிகளில் தனுஷ் இடம்பெறவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகியுள்ள இந்த டிரைலர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஜூலை 22-ம்தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக அமெரிக்காவின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் தி கிரே மேன் திரைப்படம் ஜூலை 15-ம்தேதி வெளியிடப்பட உள்ளது.
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கதையும் எழுதியிருக்கிறார் தனுஷ்.
Brace yourself for jaw-dropping action in a new global spy thriller directed by The @Russo_Brothers.
Ryan Gosling, @ChrisEvans, Ana de Armas, Jessica Henwick, @regejean, Wagner Moura, @Julia_Butters, @dhanushkraja, Alfre Woodard & Billy Bob Thorton star in The Gray Man. July 22 pic.twitter.com/ylMVhoKmGj
— Netflix (@netflix) May 24, 2022
The gray man trailer @Russo_Brothers pic.twitter.com/QW9hBs3uRC
— Dhanush (@dhanushkraja) May 24, 2022
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
