இனி லைனில் நின்று பான் கார்டு வாங்க அவசியமில்லை ஆன்லைனில் மூலம் நீங்கள் பான் கார்டு பெறலாம்.

இனி லைனில் நின்று பான் கார்டு வாங்க அவசியமில்லை  ஆன்லைனில்  மூலம்  நீங்கள் பான் கார்டு பெறலாம்.

வருமான வரித்துறை சார்பில் நிரந்தர அக்கவுண்ட் நம்பருடன் ‘பான் கார்டு’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்ட் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பிறகு சில நாட்கள் கழித்து பான் கார்டு வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த காலதாமதத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டு வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வர உள்ளது. அதன்படி ஆன்லைனில் பான்கார்டு பெற ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை மட்டுமே பதிவு செய்தால் போதும்.

கடந்த 8 நாட்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக 62 ஆயிரம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் நாடு முழுவதும் வரி செலுத்தும் அனைவருக்கும் இத்தகைய முறையில் பான் கார்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் மூலம் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும். பான் கார்டு பெற வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பான்கார்டில் ஆதார் கார்ட் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile