சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் இணையத்தில் வைரல்..

HIGHLIGHTS

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி

ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.

, சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் இணையத்தில் வைரல்..

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில், சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி. வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. தற்போது சந்திரமுகி பாகம் இரண்டின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார். தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile