அரசு உத்தரவு: டெலிகாம் நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால் ரெக்கார்ட் வைத்திருக்க வேண்டும்,

HIGHLIGHTS

தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒருங்கிணைந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் திருத்தம்

சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு உரிமதாரர்களுக்கும் ஒரு முக்கிய ஆணையை வழங்கியுள்ளது.

தற்போது கால் ரெக்கார்டிங் டேட்டா 18 மாதங்களுக்கு சேமிக்கப்படுகிறது.

அரசு உத்தரவு: டெலிகாம் நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால் ரெக்கார்ட் வைத்திருக்க வேண்டும்,

தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒருங்கிணைந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட்  சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு உரிமதாரர்களுக்கும் ஒரு முக்கிய ஆணையை வழங்கியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு நபர்களின் கால்  ரெக்கார்டகளை வைத்திருக்க வேண்டும் என்று துறை உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களின்படி, பல பாதுகாப்பு நிறுவனங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த கூடுதல் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கால் ரெக்கார்டிங் டேட்டா 18 மாதங்களுக்கு சேமிக்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தொலைத்தொடர்பு துறை, டிசம்பர் 21 தேதியிட்ட அறிவிப்பின் மூலம், அனைத்து கால் விவர ரெக்கார்டகள் , பரிமாற்ற விவரங்கள் ரெக்கார்ட்கள் மற்றும் நெட்வொர்க் தகவல் தொடர்பு ஐபி பதிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு சேமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது பொருத்தமானது. இன்டர்நெட்  சேவை வழங்குநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சாதாரண ஐபி விவரங்கள் ரெக்கார்ட்களுடன் கூடுதலாக "இன்டர்நெட் போன் " விவரங்களையும் பராமரிக்க வேண்டும் என்று அறிவிப்பு கூறுகிறது.

துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இது நடைமுறை உத்தரவு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெறுவதால், ஒரு வருடத்திற்குப் பிறகும் தரவு இன்னும் தேவை என்று பல பாதுகாப்பு நிறுவனங்கள் எங்களிடம் தெரிவித்தன. இந்த ஆர்டருக்காக அனைத்து சேவை வழங்குநர்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

இந்த உத்தரவில், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற தரவுகள் நீக்கப்படும்போதெல்லாம், அதற்கு முன்னர் அந்தத் டேட்டாக்களுடன் தொடர்புடைய அலுவலகம் மற்றும் அதிகாரி இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். தகவலை வழங்கிய அடுத்த 45 நாட்களுக்குப் பிறகு டேட்டா நீக்கப்படும்.

மற்றொரு டெலிகாம் நிறுவன அதிகாரி கூறுகையில், இந்த டேட்டாவை இரண்டு வருடங்கள் வைத்திருப்பதால் கூடுதல் செலவு ஏற்படாது, இந்த டேட்டா டெக்ஸ்ட் வடிவில் சேமிக்கப்படுவதால், அதிக இடம் தேவையில்லை. இந்தத் தரவுகளில் பெரும்பாலானவை யார் கால் செய்தார்கள் மற்றும் காலின் காலம் என்ன என்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile