Google chrome, Mozilla பயனர்களுக்கு ஆபத்து அரசு அதிரடி எச்சரிக்கை

HIGHLIGHTS

மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

CERT-In எனப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள

இந்தியாவில் உள்ள சில கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா தயாரிப்புகளில் அதிக ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Google chrome, Mozilla பயனர்களுக்கு ஆபத்து அரசு அதிரடி எச்சரிக்கை

கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா தளங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இது ஹேக்கர்களுக்கு யூஸர்களின் அனைத்து விதமான தரவுகளையும் அணுகவும் , அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தவிர்த்து தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்த அனுமதிப்பதாகவும் பகீர் தகவலையும் CERT-In வெளியிட்டுள்ளது.

CERT-In எனப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் உள்ள சில கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா தயாரிப்புகளில் அதிக ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் மற்றும் மொஸில்லா உலவிகளை பயன்படுத்தும் யூஸர்கள் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கூகுள் குரோம்:

96.0.4664.209. க்கு முந்தைய குரோம் OS பாதிப்புகள் அதிக ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக CERT-In எச்சரித்துள்ளது. மேலும் CVE-2021-43527, CVE-2022 1489, CVE-2022-1633, CVE-202-1636, CVE-2022-1859, CVE-2022-1867, and CVE-2022-23308 என Google chrome- களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மவுண்ட் வியூ, கலிபோர்னியாவை தளமாக கொண்டு செயல்படும், உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் தனது பிழைகளை ஒப்புக்கொண்டுள்ளதோடு, குறிப்பிட்ட பிழைகளை சரிசெய்து கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க Chromebook பயனர்கள் தங்கள் கணினிகளை Chrome OS இன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ளுமாறு கூகுள் வலியுறுத்தியுள்ளது.

மொஸில்லா:

குரோமைப் போல் Mozilla Firefox iOS பதிப்பு அதிக பாதிப்புகளுடன் வருவதாக CERT-In தெரிவித்துள்ளது.

Mozilla Firefox உலாவியானது "அதிக ஆபத்து" பாதிப்புகளுடன் வருகிறது என்றும் CERT-In கூறியுள்ளது. 91.10-க்கு முந்தைய Mozilla Firefox ESR பதிப்பு மற்றும் 101-க்கு முந்தைய Mozilla Firefox பதிப்பு ஆகியவற்றில் பிழைகள் இருந்ததாக CERT-In தெரிவித்துள்ளது. இந்த பிழையானது, ஹேக்கர்கள் ரிமோட் அட்டாக் எனப்படும் குறிப்பிட்ட கணினியை இலக்கு வைத்து தாக்கி முக்கிய தகவல்களை திருடவும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தவிர்ப்பது மற்றும் குறியீடுகளை தொலைவில் இருந்து இயக்கவும் அனுமதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான அப்டேட்களையும் மொஸில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. யூஸர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க Mozilla Firefox iOS 101 பதிப்பை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

CERT-In ன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த பாதிப்புகள் குறிப்பிட்ட கணினி அல்லது லேப்டாப்பில் சேவை மறுப்பு (denial-of-service) தாக்குதலுக்கு வழிவகுக்கிறது. சேவை மறுப்பு (DoS) தாக்குதல் என்பது யூஸர்களின் தங்கள் கணினியில் குறிப்பிட்ட தகவல்கள் அல்லது ஆப்களை அணுக முடியாமல் போவது ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile