Realme Buds 2 Neo ரூ. 499 விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

இந்திய சந்தையில் ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போனினை அறிமுகம் செய்தது

ரியல்மி பட்ஸ் 2 நியோ புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

புதிய பட்ஸ் 2 நியோ மாடலில் 90 டிகிரி ஆங்கில் கொண்ட ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போனினை அறிமுகம் செய்தது. இது 2019 ஆண்டு அறிமுகமான ரியல்மி பட்ஸ் 2 மாடலின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். இதில் கியர் வடிவ கேபிள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வயர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வழி செய்யும். 

ரியல்மி பட்ஸ் 2 நியோ புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 499 ஆகும். இது ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஸ் 2 மாடலில் இயர்போன் நேராக வழங்கப்பட்டு இருந்தது. புதிய பட்ஸ் 2 நியோ மாடலில் 90 டிகிரி ஆங்கில் கொண்ட ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங்கின் போது கூடுதல் க்ரிப் வழங்குகிறது. மியூசிக் பிளே / பாஸ், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்-லைன் ரிமோட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :