சத்தமில்லாமல் OnePlus Nord Buds 4 Pro அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

OnePlus இந்தியாவில் அதன் புதிய TWS இயர்பட்ஸ் OnePlus Nord Buds 4 Pro அறிமுகம் செய்தது

ஜூலை 2024 அறிமுகம் செய்யப்பட்ட Nord Buds 3 Pro மிக பெரிய வெற்றியை தொடர்ந்து அறிமுகம் செய்தது

OnePlus Nord Buds 4 Pro யின் விலை ரூ,3999 ஆக வைக்கப்பட்டுள்ளது

OnePlus இந்தியாவில் அதன் புதிய TWS இயர்பட்ஸ் OnePlus Nord Buds 4 Pro அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்ஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகம் செய்தது அதாவது ஜூலை 2024 அறிமுகம் செய்யப்பட்ட Nord Buds 3 Pro மிக பெரிய வெற்றியை தொடர்ந்து இதை அறிமுகம் செய்தது.மேலும் இதில் நீண்ட நாள் பேட்டரி லைப், நோய்ஸ் கேன்சிலேஷன் மற்றும் பல அசத்தும் அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் பல தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

OnePlus Nord Buds 4 Pro விலை தகவல்.

OnePlus Nord Buds 4 Pro யின் விலை ரூ,3999 ஆக வைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை அறிமுக சலுகையுடன் ரூ,3,799க்கு வாங்கலாம் மேலும் இதன் விற்பனை மார்ச் 23,2026 அன்று இருக்கும், இதை நீங்கள் OnePlus Store App, OnePlus Experience Stores, Amazon, Flipkart, Myntra போன்றவற்றில் வாங்கலாம்.

OnePlus Nord Buds 4 Pro சிறப்பம்சம்.

OnePlus Nord Buds 4 Pro யில் இருக்கும் மிக பெரிய அம்சம் இதில் அதன் 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆகும், இது பொதுவாக பிரீமியம் இயர்பட்ஸ்களில் காணப்படும் ஒரு அம்சமாகும். இது ஒரு சிறந்த மற்றும் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. டிரைவரின் அளவு 12mm ஆக (முன்பு 12.4mm) சற்றே குறைக்கப்பட்டிருந்தாலும், புதிய டிரைவர்கள் 100% அதிக சக்தி வாய்ந்தவை என்றும், டீப் பேஸ் மற்றும் தெளிவான வைச்களை வழங்கும் டைட்டானியம் பினிஷ் கொண்டுள்ளன என்றும் நிறுவனம் கூறுகிறது.

இதனுடன் இந்த புதிய oneplus Nord Buds 4 Pro யில் AI algorithms நோய்ஸ் ரியல் டைமாக கண்காணிக்கிறது, இது இதனுடன், 3D ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் கேம் சவுண்ட் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்களும் இதில் உள்ளன, அவை 360° சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை அளிக்கின்றன.

மேலும் இந்த இந்த இயர்பட்களில் இப்போது 6 மைக்ரோஃபோன்கள் (ஒவ்வொரு இயர்பட்டிலும் 3) உள்ளன, இது காலின் தரத்தை மேம்படுத்துவதோடு, ANC-ஐயும் மிகவும் திறம்படச் செயல்பட வைக்கிறது, இது 100% சதவிகிதம் வரை பவர்புல்லாக இருக்கிறது.

இதையும் படிங்க Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே நேரத்தில் இந்த மூன்று போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

பேட்டரி ஆயுளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் (44 மணிநேரம்) இருந்த பர்போமான்ஸ் வழங்குகிறது, தற்போது (ANC அணைக்கப்பட்ட நிலையில்) 54 மணிநேரம் வரை கிடைக்கிறது.

சார்ஜ் செய்யும் நேரத்தைப் பொறுத்தவரை, இயர்பட்களை மட்டும் சார்ஜ் செய்ய சுமார் 60 நிமிடங்களும், கேஸுடன் சேர்த்து சார்ஜ் செய்ய சுமார் 90 நிமிடங்களும் ஆகும்.

மேலும் இந்த OnePlus Nord Buds 4 Pro யில் மிக சிறந்த ம்யுசிக் ஹை தேபினேஷன் உடன் இதில் LHDC 5.0 மற்றும் Bluetooth 6.0 கனெக்டிவிட்டி இதனுடன் இதில் ஆறு மைக்ரோபோன் உடன் இதில் க்ரிச்ட்டல் கிளியர் வொயிஸ் காலிங் அனுபவம் பெறலாம் இதனுடன் இதில் IP55 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரெசிஸ் வழங்குகிறது இதனுடன் இது OxygenOS 15.0.1 யில் இயங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :