OnePlus நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனின் குறைந்த விலை எடிஷனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
முந்தைய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் மாடல் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. இது முதல் தலைமுறை ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இதுதவிர ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், பெயருக்கு ஏற்றார்போல் இதன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் இசட் பிராண்டிங் கொண்ட சாதனங்கள் விலையை குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளத
ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றிய விவரங்கள் ஆக்சிஜன் ஒஎஸ் 11 குறியீடுகளில் லீக் ஆகி இருந்தது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் 8K 960fps தர வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், புதிய இயர்போன் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile