5.1 சேனல் சப்போர்ட் கொண்ட பவர்புல் iBall Cinebar 560 soundbar அறிமுகம் உங்க வீட்டையே தியேட்டர் ஆக்கிடும்

HIGHLIGHTS

iBall அதன் புதிய Cinebar 560 soundbar அறிமுகம்.

தில் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சமீபத்திய சவுண்ட் சிஸ்டம் , சினிமேட்டிக் தரத்திலான சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது

iBall அதன் புதிய Cinebar 560 soundbar அறிமுகம். இந்த சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் டிசைன் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் இதில் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. இந்த சமீபத்திய சவுண்ட் சிஸ்டம் , சினிமேட்டிக் தரத்திலான சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது , நவீன வரவேற்பறை அமைப்புகளுடன் எளிதில் பொருந்தக்கூடிய ஒரு ஸ்லீக் டிசைனுடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. சவுண்ட் பர்போமன்சுடன் , இந்நிறுவனம் பல கனெக்ஷன் வசதிகள் மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர் சப்போர்ட் ஆகியவை முன்னிலைப்படுத்துகிறது.

iBall Cinebar 560 விலை தகவல்

iBall சினிபார் 560 இந்தியாவில் ₹19,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Amazon.in யில் வாங்கலாம்.

iBall Cinebar 560 சிறப்பம்சம்.

ஐபால் சினிபார் 560, மூன்று டிரைவர் சவுண்ட்பார், இரட்டை வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் 20.32 cm வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு உண்மையான 5.1 சேனல் செட்டிங் கொண்டுள்ளது. டால்பி ஆடியோவால் இயக்கப்படும் இந்த அமைப்பு, திரைப்படங்கள், OTT கன்டென்ட் , கேமிங், ம்யுசிக் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் போட்டிகளைக் காண்பதற்காக 800W RMS வரையிலான அவுட்புட் வழங்குகிறது.

இதையும் படிங்க பின்னுது ஆபர் boAt Aavante Bar Soundbar வெறும் ரூ,5,433 யில் வாங்கலாம், இதில் ரூ,26,295 வரை டிஸ்கவுண்ட்

ஐபால் நிறுவனத்தின்படி, இந்த சவுண்ட்பார் விடர் சவுண்ட் பிரிப்பு, வலுவான பாஸ் சவுண்ட் மற்றும் தெளிவான கான்வேர்செஷன் சவுண்ட் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள், ரூம் முழுவதும் அதிகப்படியான கேபிள் மேலாண்மை தேவைப்படாமல், ரூம் முழுவதும் நிரப்பும் சரவுண்ட் சவுண்ட் எபக்ட் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்த சவுண்ட்பாரில் புளூடூத் 5.3, TV ARC, Optical IN, USB மற்றும் AUX சப்போர்ட் உள்ளிட்ட பல கனெக்ஷன் வசதிகளும் உள்ளன. இது தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமிங் கன்சோல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களுடன் இணக்கத்தன்மையை அனுமதிக்கிறது. கூடுதலாக, பயனர்கள் இயக்கப்படும் கன்டென்ட் வகையின் அடிப்படையில் ஆடியோ ப்ரொபைலை அட்ஜஸ்ட் செய்வதற்க்கு பிரத்யேக ஈக்யூ (EQ) முறைகளையும் பெறுகிறார்கள்.

சவுண்ட் பர்போமன்ஸ் தவிர, சினிபார் 560 ஆனது மிகவும் நவீன தோற்றத்திற்காக, பிரீமியம் பளபளப்பான க்ளோசி பினிசுடன் மெஸ் டிசைனை கொண்டுள்ளது. எளிதான இன்ஸ்டலேஷன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்காக, ஐபால் நிறுவனம் முன்பக்க LED ஸ்க்ரீன் , ரிமோட் கண்ட்ரோல் சப்போர்ட் மற்றும் சுவரில் பொருத்தும் (Wall Mound) வசதியையும் சேர்த்துள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :