WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி கலர் கலரான தீம் போனில் மட்டுமல்ல லேப்டாப்பிலும் மாற்றலாம்

HIGHLIGHTS

WhatsApp இறுதியாக, அதன் சேட் தீம்களை அதன் வெப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்

இந்த அம்சம் WhatsApp யின் iOS மற்றும் Android பயனர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும்

இந்த அம்சம் WhatsApp யின் iOS மற்றும் Android பயனர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும்

WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி கலர் கலரான தீம் போனில் மட்டுமல்ல லேப்டாப்பிலும் மாற்றலாம்

WhatsApp இறுதியாக, அதன் சேட் தீம்களை அதன் வெப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் ஒரு அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அப்டேட், பயனர்கள் தங்கள் கான்வேர்செசனிலிருந்து தோற்றத்தை பிரவுசரில் இருந்தே நேரடியாகப் பல்வேறு கலர்களுடன் கொண்டு கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கும். மேலும் இந்த அம்சம் WhatsApp யின் iOS மற்றும் Android பயனர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும் மேலும் இதன் முழு அம்சங்கள் பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய சேட் தீம் அம்சம் செய்ய புதிய ஆப்ஷன் கிடைக்கும்

WABetaInfo– வின் அறிக்கை ஒன்றின்படி , பயனர்கள் விரைவில் வாட்ஸ்அப் வெப்பில் கஸ்டமைஸ் சேட் டீம் (default chat theme) அமைக்க முடியும். இது சேட்களின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிவிடும். அதாவது, வால்பேப்பரை மட்டுமல்லாமல், மெசேஜ் குமிழ்களின் (message bubbles) கலர்களையும் , அதற்கேற்ற பின்னணிகளையும் மாற்றுவதன் மூலம், சேட்கள் இன்னும் ஸ்டைலாகத் தோற்றமளிக்கும்.

இதையும் படிங்க பெயரை ரகசியமாக வச்சிருக்கும் Motorola, விரைவில் புதிய போன் மார்க்கெட்டில் என்ட்ரி எப்போன்னு பாருங்க

49 தீம்களுடன் உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

இந்த அம்சம் ஒவ்வொரு சேட்யின் தோற்றத்தையும் கஸ்டமைஸ் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இதன் பொருள், உங்கள் தனிப்பட்ட, பணி அல்லது குழு அரட்டைகள் ஒவ்வொன்றும் தங்களின் தனித்துவமான தீமை கொண்டிருக்க முடியும். நிறுவனம் சுமார் 49 தீம்களில் பணியாற்றி வருகிறது. இவற்றில் பல்வேறு வண்ணங்களின் வெவ்வேறு சாயல்களும் தொனிகளும் அடங்கும், குறிப்பாக நீல நிறத்தின் பல மாறுபாடுகள் இதில் உள்ளன. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்தக் தீம்கள்கள் உங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை. நீங்கள் செய்யும் எந்த மாற்றங்களும் உங்களுக்கு மட்டுமே தெரியும்; மற்றவர் அதே நிலையான அரட்டைத் தோற்றத்தையே காண்பார்.

இந்த அம்சம் எப்போது வரும்?

இந்த அம்சம் தற்போது டெவலப்மென்ட் நிலையில் உள்ளது, இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. தொடக்கத்தில், கருத்துக்களைச் சேகரித்து அதைச் செம்மைப்படுத்துவதற்காக, இது பீட்டா பயனர்களுக்குச் டெஸ்டிங்காக வழங்கப்படும். அதன் பிறகு வரும் அப்டேட்களில் இது அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo