WhatsApp மிகவும் பாப்புலரான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் ஆகும் இது தொடர்ந்து அதன் கஸ்டமர்களுக்கு புது புது அம்சத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது பல ஹேக்கிங் போன்ற பிரச்சனைக்கு WhatsApp மிக பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் ஹெக்கர்களிடம் இருந்து தப்பிக்க Two-Factor Authentication (2FA)இதுவரை செய்யவில்லை என்றால் உடனே செய்யவும் இல்லை என்றால் மிக பெரிய சிக்கல் உண்டாகிவிடும்.
Two-Factor Authentication ஒரு செக்யுரிட்டி லேயர் ஆகும் இது உங்களின் WhatsApp யின் தேவை இல்லாத அக்கவுண்ட் அக்சஸ்லிருந்து தடுக்கும், அதாவது இந்த அம்சமானது எப்பொழுது எந்த புதிய டிவைசில் ஆன் செய்தாலும் WhatsApp அக்கவுண்டில் லாகின் செய்ய முயலும்போது 6-digit PIN போட சொல்லி கேட்க்கும் மேலும் அது கண்டிப்பாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை உங்களை தவிர, அதாவது மொபைல் நம்பரில் OTP வருவது கூட யாருக்கும் தெரியாது.
இதையும் படிங்க Airtel யின் இந்த திட்டத்தில் Amazon Prime Lite உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல
வாட்ஸ்அப் தானே இந்த அம்சத்தை பல முறை இயக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்திய மாதங்களில், மோசடி கால்கள் மற்றும் ஃபிஷிங் லிங்க்கள் மூலம் மக்கள் தங்கள் அக்கவுண்ட் இழந்த WhatsApp அக்கவுன்ட் ஹேக்கிங் வழக்குகள் அதிகரித்துள்ளன.