WhatsApp scam alert
WhatsApp விரைவில் ஒரு புதிய சேப்ட்டி அம்சம் கொண்டு வரும், இது ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க உங்களுக்குப் பெரிதும் உதவும். WABetaInfo-வின் அறிக்கை ஒன்றின்படி, இந்த அம்சம் தெரியாத நம்பரிலிருந்து வரும் மெசேஜ்களை அடையாளம் கண்டு, கான்வேர்செசன் நேரடியாக எச்சரிக்கைகளைக் காண்பிக்கும். முக்கியமாக, மெசேஜ்கள் பயனரின் சொந்த போனில் மட்டுமே சரிபார்க்கப்படும், இது ப்ரைவசி உறுதி செய்கிறது. இந்த அம்சம் தற்போது மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது, ஆனால் இது இன்னும் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு வெளியாகவில்லை. WhatsApp யின் Scam Alert என்றால் என்ன? இதனால் என்ன பயன் பார்க்கலாம் வாங்க.
இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் பெரும்பாலும் தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ்களை அனுப்பி மக்களைப் பயமுறுத்தவோ அல்லது குழப்பவோ முயற்சிக்கின்றனர். இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க, WhatsApp ஒரு புதிய ‘மோசடி எச்சரிக்கை’ (Scam Alert) அம்சத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, ஒரு மெசேஜ் போலியானது என்று தோன்றினால், இந்த அம்சம் உடனடியாகப் பயனர்களை எச்சரிக்கும். முக்கியமாக, வாட்ஸ்அப் எந்தவொரு கான்வேர்செசனையும் தானாகவே ப்ளாக் செய்யது ; மாறாக, அது தேவையான தகவல்களை வழங்கி, கான்வேர்செசன் தொடர்வதா அல்லது அந்த நம்பரில் மீது நடவடிக்கை எடுப்பதா என்பதைப் பயனரின் முடிவிற்கே விட்டுவிடும்.
இந்த அம்சம் இயக்கப்படும்போது, உங்கள் போனில் உள்ள தெரியாத நம்பரிலிருந்து வரும் மெசேஜ்களை இந்தச் ஆப் சரிபார்க்கும். ஒரு மெசேஜ் மோசடி போல சந்தேகத்திற்கிடமாகத் தோன்றினால், “இது ஒரு மோசடியாக இருக்கலாம்” என்பது போன்ற ஒரு எச்சரிக்கை உடனடியாக அந்த உரையாடலில் தோன்றும். அப்போது பயனர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும்: ஒன்று, அந்த நம்பரை தடுத்துப் புகாரளிப்பது, அல்லது அந்தச் மெசேஜை நம்பி கான்வேர்செசன் தொடர்வது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த முழு அமைப்பும் உங்கள் டிவைஸில் செயல்படும், அதாவது உங்கள் உரையாடல்கள் வாட்ஸ்அப் அல்லது மெட்டா சர்வர்களுக்கு அனுப்பப்படாது.
இதையும் படிங்க Google சர்ச் AI பெரும் அவதி, இப்பொழுது DuckDuckGo புதிய அவதாரமாக உருவெடுத்துள்ளது
மேலும், மோசடி எச்சரிக்கைகள் எப்போது, எவ்வளவு அடிக்கடி செயல்படுத்தப்பட்டன என்பதைப் பயனர்கள் பார்க்க அனுமதிக்கும் ‘உள்ளூர் வெளிப்படைத்தன்மை அறிக்கை’ (Local Transparency Report) என்ற அம்சத்தையும் அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்தத் தகவல் உங்கள் போனில் மட்டுமே சேமிக்கப்படும், யாருடனும் பகிரப்படாது.
மோசடி எச்சரிக்கை ஒரு விருப்பத் தேர்வாக இருக்கும், மேலும் இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பயனர்கள், அமைப்புகள் வழியாக அதைத் தாங்களாகவே இயக்க வேண்டும்.
வாட்ஸ்அப் தனது புதிய மோசடி எச்சரிக்கை அம்சம் குறித்து தற்போதைக்கு மௌனம் காத்து வருகிறது. இருப்பினும், லீக்கள் மற்றும் வதந்திகளின்படி, இந்த பாதுகாப்பு அம்சம் அனைத்து பயனர்களுக்கும் பொதுவில் வெளியிடுவதற்கு முன்பாக, வரவிருக்கும் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.