Jio vs Airtel 3999 annual recharge plan validity 5G data calls and other benefits
உங்கள் மொபைல நம்பருக்கு ஓராண்டுக்கான ரீசார்ஜ் பிளானை தேர்வுசெய்ய நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் Jio மற்றும் Airtel ஆகிய இரண்டு கம்பெனிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது, எந்த கம்பெனி சிறந்த பிளானை வழங்குகிறது என்பதில் உங்களுக்குக் குழப்பம் நிலவுகிறது என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது. இன்று, Jio மற்றும் Airtel ஆகிய கம்பெனிகள் வழங்கும் ₹3,999 மதிப்பிலான ஓராண்டு பிளான்களுக்கு இடையிலான வேறுபாடுகளை நாங்கள் விரிவாக விளக்கவுள்ளோம். இந்த இரண்டு கம்பெனிகளும் ஒரே விலையில் இந்த பிளான்களை வழங்கினாலும் அவை வழங்கும் பெனிபிட்கள் மற்றும் பயன்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிளான் அதிக அளவிலான OTT மற்றும் AI சார்ந்த பீச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றால், மற்றொரு பிளான் செக்யூரிட்டி மற்றும் பிரீமியம் டிவைஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, உங்கள் ரீசார்ஜ் நடவடிக்கையைத் தொடர்வதற்கு முன் இந்த இரண்டு பிளான்களுக்கும் இடையிலான நுணுக்கமான வேறுபாடுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
Jio வின் ₹3,999 பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஆண்டு முழுவதும் நீங்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பிளான் நாளொன்றுக்கு 2.5GB அதிவேகத் டேட்டா வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் மொத்தம் சுமார் 912.5GB டேட்டா உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் ஒரு 5G யூசராக இருந்தால் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறும் கூடுதல் நன்மையையும் நீங்கள் அனுபவிக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS வசதியும் அடங்கியுள்ளது.
என்டேர்டைன்மெண்ட்களுக்காக யூசர்கள் JioTV ஆப் வாயிலாக FanCode அணுகலாம். அத்துடன், JioTV மற்றும் JioAICloud வாயிலாக 50GB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த பிளானில் JioHotstar Mobile + Hollywood க்கான 3 மாதச் சப்கிரிப்சன் உள்ளடங்கியுள்ளது. கம்பெனி 18 மாதங்களுக்கான Google Gemini Pro அக்சஸ் வழங்குகிறது. இந்த சர்வீஸுடன் 5000GB அளவிலான கிளவுட் ஸ்டோரேஜும், Nano Banana போன்ற அர்டிபிசியால் இன்டெலிஜெண்ட்ஸ் (AI) பீச்சர்களுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Airtel யின் ₹3,999 பிளானும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. யூசர்களுக்குத் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்கள் ஆகியவற்றுடன் தினமும் 100 SMS களையும் வழங்குகிறது.
என்டேர்டைன்மெண்ட்களுக்காக, Airtel தனது பிளானில் ஓராண்டுக்கான Disney+ Hotstar Mobile சப்கிரிப்சன் சேர்த்துள்ளது. 5G யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறும் கூடுதல் நன்மையையும் அனுபவிக்கின்றனர். இந்த பிளானின் முக்கிய சிறப்பம்சம் சுமார் ₹4,000 மதிப்புள்ள Adobe Express Premium சப்கிரிப்ஷனாகும். இவற்றுடன் சேர்த்து, ‘Safe Network’ வசதி, ஸ்பேம் கால்கள் மற்றும் மோசடி லிங்க் குறித்த எச்சரிக்கைகள், பேங்க் OTP பாதுகாப்பு மற்றும் இலவச ‘Hello Tunes’ போன்ற பீச்சர்களையும் யூசர்கள் பெறுகின்றனர்.
நீங்கள் OTT கன்டென்ட்கள், AI பீச்சர்கள் மற்றும் மேம்பட்ட என்டேர்டைன்மென்ட் அனுபவத்தை விரும்புபவர் என்றால், Jio-வின் ₹3,999 திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். அதே உங்கள் கன்டென்ட் உருவாக்குதல், வணிகம் அல்லது எடிட்டிங் சார்ந்ததாக இருந்தால், Airtel யின் பிளான் ஒரு சிறந்த தேர்வாக அமையலாம். ஏனெனில் இது Adobe Express Premium போன்ற சிறப்பம்சங்களை வழங்குகிறது. Airtel தனது யூசர்களுக்கு ஸ்பேம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது. இவை பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும்.