WhatsApp அதன் பயனர்களுக்கு பல புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அதாவது WhatsApp 1.5 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள், பல ஆண்டுகளாக எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இலவச சேவையை வழங்கிய பிறகு, சேட் ஆப்யில் விளம்பரங்களைக் காட்ட WhatsApp தொடங்க உள்ளது. Instagram யின் ஸ்டோரி போலவே, பயனர்கள் விளம்பரங்களை ஸ்டேட்டஸ் ஸ்க்ரீனில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது தெளிவாகிறது. எனவே Instagram யில் சில ஸ்டோரியை பார்த்த பிறகு விளம்பரங்களைப் பார்ப்பது போல, WhatsApp யில் சில ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்கலை பார்த்த பிறகு விளம்பரங்களைக் காண்பீர்கள். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
WhatsApp யின் மூன்று புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது மேலும் இது பிஸ்னஸ் மற்றும் கிரியேட்டர்க்கு இது பயன்படும்
Channel subscriptions: மாதந்திர கட்டணத்தில் எக்ஸ்க்ளுசிவ் அப்டேட்
இந்த புதிய அம்சமானது அப்டேட் டேப் என்ற பகுதியில் மட்டும் தோன்றும் ஆனால், நீங்கள் தனிப்பட்ட சேட் அல்லது உங்களின் அன்புக்குரியவர்களிடம் பேசி கொண்டிருந்தால் உங்களை எந்த இடயுரும் இருக்காது அதாவது எப்பொழுதும் போல சாதரணமாக சேட் செய்யலாம்.
இதையும் படிங்க: IRCTC ஜூலை 1 முதல் புதிய விதி Aadhaar card உடன் IRCTC அக்கவுண்ட் லிங்க் செய்யாவிட்டால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது
WhatsApp இதில் தெரிவிப்பது என்னவென்றால் இந்த Ad அம்சத்தால் எந்த ஒரு பாதிப்பு இருக்காது உங்களின் கால்,மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவை end-to-end encrypted ஆக இருக்கும் அதாவது இதை யாராலும் பார்க்க முடியாது எங்களையும் உட்பட என WhatsApp கூறியுள்ளது.
உங்கள் போன் நம்பர் விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று நிறுவனம் கூறுகிறது. தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட, WhatsApp உங்கள் நாடு, மொழி, பின்பற்றப்படும் சேனல்கள் மற்றும் விளம்பர தொடர்புகள் போன்ற லிமிடெட் தகவல்களை மட்டுமே பயன்படுத்தும். அக்கவுன்ட் சென்டர் மூலம் உங்கள் Meta அக்கவுன்ட் உடன் WhatsApp-ஐ இணைத்திருந்தால், Facebook மற்றும் Instagram போன்ற பிற ஆப் களிலிருந்து உங்கள் விளம்பர விருப்பங்களையும் Meta பயன்படுத்தலாம்.