WhatsApp யில் Guest Calling அம்சம் ஒரே நேரத்தில் 32 பேரை சேர்க்கலாம் அது எப்படி வாங்க பார்க்கலாம்

HIGHLIGHTS

WhatsApp கெஸ்ட் கால் (guest calling) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இனி, ஆப்யில் அக்கவுன்ட் இல்லாதவர்களையும் வொயிஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு அழைக்க முடியும்

இன்டர்நெட் பிரவுசர் (internet browser) கால் லிங்கை திறந்தால் மட்டும் போதும்.

WhatsApp பயனர்கள் இனி, ஆப்யில் அக்கவுன்ட் இல்லாதவர்களையும் வொயிஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு அழைக்க முடியும். அந்நிறுவனம் கெஸ்ட் கால் (guest calling) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அக்கவுண்டை உருவாக்காமலோ அல்லது ஆப்பை டவுன்லோட் செய்யாமலோ ஒரு காலில் இணையலாம். இதைச் செய்ய, உங்கள் கம்யூட்டார் இன்டர்நெட் பிரவுசர் (internet browser) கால் லிங்கை திறந்தால் மட்டும் போதும்.

WhatsApp Guest Calling அம்சம் எப்படி வேலை செய்யும்

WhatsApp கெஸ்ட் கால் அம்சத்தைப் பயன்படுத்த, காலை தொடங்கும் பயனரான ஹோஸ்ட், ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் கொண்டிருக்க வேண்டும். ஹோஸ்ட் தனது அக்கவுன்டிலிருந்து லிருந்து ஒரு கெஸ்ட் கால் லிங்கை உருவாக்கி, அதை எந்தவொரு பயனருக்கும் அனுப்பலாம். இந்த கால் லிங்கை கொண்டிருப்பவர்கள், வாட்ஸ்அப் அக்கவுண்ட் உருவாக்காமலோ அல்லது ஆப்பை இன்ஸ்டால் செயாமல் கூட காலில் இணைய முடியும். அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பின் இந்த கெஸ்ட் கால் அம்சம், வழக்கமான தளத்தைப் போலவே, முழுமையாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும், அதாவது பாதுகாப்பாக இருக்கும். காலில் நபர்களைச் சேர்க்கவும் நீக்கவும் ஹோஸ்ட்டுக்கு உரிமை உண்டு.

WhatsApp Guest Calling 32 பேர் வரை சேர்க்கலாம்

வாட்ஸ்அப்பின்படி, இந்த அம்சம் ஒரே காலில் 32 பேர் வரை இணைக்க அனுமதிக்கிறது. இந்த கால்கள் இலவசமாக இருக்கும் மற்றும் நேர லிமிட் இல்லை. இது திரை பகிர்வு, எமோஜி எபக்ட்கள் மற்றும் பேசுவதற்கு கையை உயர்த்துவது போன்ற விருப்பங்களையும் வழங்கும்.

கான்வேர்செஷன்களை பாதுகாப்பாக வைத்திருக்க, விருந்தினர் கால்களிலும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. விருந்தினர்களால் மற்றவர்களின் போன்கள் நம்பர்களைப் பார்க்கவோ, மெசேஜ்களை அனுப்பவோ, அல்லது தாங்களாகவே மற்றவர்களை காலில் சேர்க்கவோ முடியாது. காலை தொடங்குபவரால் கெஸ்ட்டை நீக்கவும் முடியும்.

முக்கியமான மீட்டிங் , படிப்பு அல்லது கண்வேர்ஷேஷன் கலந்துகொள்ள வேண்டியிருந்தும், வாட்ஸ்அப் அக்கவுண்டை உருவாக்க விரும்பாதவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த அம்சம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுவதால், எல்லாப் பயனர்களுக்கும் இந்த விருப்பம் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம்.

இதையும் படிங்க :BSNL யின் 5G சேவை விரைவில் அறிமுகம் அரசின் அதிரடி தயார்

கெஸ்ட் கால் அம்சம் எப்படி வேலை செய்யு?

இதற்கு, முதலில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய சாப்ட்வேரை அப்டேட் செய்யவும் .
பிறகு, கால் விருப்பத்திற்குச் சென்று + ஐகானைத் தட்டவும்.
இங்கே நீங்கள் கால் லிங்கை உருவாக்கும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.
லிங்க் உருவாக்கப்பட்டவுடன், யூசருக்கு மெசேஜ் , ஈமெயில் அல்லது பிற மெசேஜ் சேவைகள் வழியாக ஒருவரை காலில் சேர அழைக்கலாம்.
கனெக்ஷன் ஏற்கும் பங்கேற்பாளர்கள் கெஸ்ட் காலில் இணைய முடியும்.
ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 பேர் காலில் இணையலாம். அதாவது, 31 பேருக்கு மட்டுமே லிங்கை அனுப்ப முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :