ஆண்ட்ராய்டு செயலியாக இருந்தால் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் அப்டேட் பண்ணுங்க.

ஆண்ட்ராய்டு செயலியாக இருந்தால் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் அப்டேட் பண்ணுங்க.
HIGHLIGHTS

பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ட்விட்டர் செயலியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு பிழை பற்றி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர் ஈமெயில்கள் மூலம் தகவல் தெரிவித்து வருகிறது. 

இந்த பிழை ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள பிழை ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட்டினை ஹேக்கர்கள் இயக்க வழி செய்யும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.இந்த குறியீடுகள் உலகம் முழுக்க ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பிழை எவ்வாறு செயலியில் புகுத்தப்பட்டது என்றோ, இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது போன்று எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்த பிழை ட்விட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிழையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo