Truecaller
ட்ரூகாலர் போன்ற காலிங் மேலாண்மை ஆப்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் (TRAI) தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. தேவையற்ற மற்றும் மோசடியான கால்களை தடுப்பதற்காக டிராய் ஒரு புதிய வரைவைத் தயாரித்துள்ளது. வெரிபிகேஷன் நோக்கங்களுக்காக பேங்க்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கால்களை ட்ரூகாலர் ஸ்பேம் எனக் குறியிடுவதாகவும் அல்லது தடுப்பதாகவும் டிராய் கூறுகிறது. காலர்கள் அடையாளச் செயலியான ட்ரூகாலரின் தலைமைச் செயல் அதிகாரி ரிஷித் ஜுன்ஜுன்வாலா இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளார்.
மோசடி தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பணப் ட்ரேன்ஸ்செக்ஷன் உறுதிப்படுத்தும் கால்கள் போன்ற முக்கியமான பேங்க் காண்டேக்ட்களுக்கு பதிலளிப்பதில் இருந்து கஸ்டமர்களை தயங்க வைப்பதன் மூலம், அத்தகைய காண்டேக்ட்களை பாதிக்கும் அபாயத்தை இச்செயல்முறை உருவாக்குவதாக TRAI வாதிட்டுள்ளது.
TRAI-யின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, ‘1600’ வரிசை நம்பர்களை ‘ஸ்பேம்’ (spam) என அடையாளப்படுத்த வேண்டாம் என்று அந்த ஒழுங்குமுறை ஆணையம் முன்னதாகவே Truecaller-க்கு அறிவுறுத்தியிருந்தது; ஆனால், நிறுவனம் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது.
“Truecaller ஆப் தங்கள் கால்களை ‘ஸ்பேம்’ (spam) என முத்திரை குத்துவதாக பேங்க்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இவை முக்கியமான சேவை மற்றும் ட்ரேன்ஸ்செக்ஷனை தொடர்பான கால்கள் என்பதால், கஸ்டமர்கள் அவற்றை ஏற்காமல் போகக்கூடும். இது சேவைகளை வழங்குவதிலும், ட்ரேன்ஸ்செக்ஷன் தொடர்பான தகவல்தொடர்புகளிலும் தீவிர சிக்கலை ஏற்படுத்துகிறது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ‘மணி கன்ட்ரோல்’ (Moneycontrol) மீடியாவிற்கு தெரிவித்தார்.
பேங்க்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் சேவை மற்றும் ட்ரேன்ஸ்செக்ஷன்சனை சார்ந்த தகவல்தொடர்புகளுக்காக மட்டுமே ‘1600’ என்ற எண் வரிசையை TRAI ஒதுக்கியுள்ளது.
அதிகாரியின் கூற்றுப்படி, இந்தியாவில் செயல்படும் ஆப்கள் தகவல் தொழில்நுட்ப (IT) கட்டமைப்பின் கீழ் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்று டிராய் (TRAI) நம்புகிறது. விதிகள் பின்பற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த அதிகாரம், சூழ்நிலையைப் பொறுத்து, MeitY, தொலைத்தொடர்புத் துறை (DoT) அல்லது டிராய் (TRAI) ஆக இருக்கலாம்.
இதுபோன்ற தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமையை டிராய்க்கு வழங்க அரசு முடிவு செய்தால், அதற்காக அரசு முதலில் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமையையோ அல்லது அதிகாரத்தையோ டிராய்க்கு வழங்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பேம் அழைப்புகள் அதிகரிப்பதற்கு டிராயின் அழைப்பாளர் அடையாளக் கொள்கையே காரணம் என்று ஜூலை 8 அன்று ட்ரூகாலர் குற்றம் சாட்டியதுடன், அழைப்பாளர் அடையாளச் ஆப்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக வந்த செய்திகளையும் மறுத்தது.
ட்விட்டரின் X தளத்தில் ஜூலை 8 அன்று பதிவிட்ட ஒரு போஸ்ட்டில் , ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷித் ஜுன்ஜுன்வாலா, 140 மற்றும் 1600 தொடர் நம்பர்களை வெள்ளைப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற டிராயின் உத்தரவுக்குத் தங்கள் நிறுவனம் இணங்கியுள்ளதாகவும், சைபர் அடிப்படையிலான ஆப்களுக்கு இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒரு நிலையான எண் வரிசையை வெளியிடும் நோக்கம் காகிதத்தில் நல்லதாகத் தோன்றினாலும், 140 மற்றும் 1600 எண் வரிசைகள் வழியாக வரும் ஸ்பேம் கால்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஜுன்ஜுன்வாலா சோசியல் மீடியா போஸ்ட்டல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.