TikTok ரேட்டிங் 4.7லிருந்து 2 ஆக குறைக்கப்பட்டது.

Updated on 21-May-2020
HIGHLIGHTS

பிளே ஸ்டோரில் 4.7 மதிப்பீட்டைக் கொண்டிருந்தது,

பல பயனர்கள் டிக்டோக்கிற்கு 1 நட்சத்திரத்தை கொடுத்து

பிளே ஸ்டோரில் டிக்டோக்கின் பயனர் மதிப்பீடு ஷார்ட் வீடியோ தயாரிக்கும் தளம் திடீரென 2 ஆகக் குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை டிக்டோக் பிளே ஸ்டோரில் 4.7 மதிப்பீட்டைக் கொண்டிருந்தது, மேலும் இது பார்வைக்கு 2 ஆகக் குறைந்துள்ளது. உண்மையில், நிறைய இணைய பயனர்களும் மெய்நிகர் சண்டையில் சேர்ந்துள்ளனர், இது யூடியூப் மற்றும் டிக்டாக் இடையே யார் சிறந்தவர் என்ற கேள்வியுடன் தொடங்கியது. பல பயனர்கள் டிக்டோக்கிற்கு 1 நட்சத்திரத்தை கொடுத்து, அதை இந்தியாவில் தடை செய்யக் கோருகின்றனர்.

இதுதவிர, டிக்டாக் செயலி அன் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தை நியாயபடுத்துவது போன்ற வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து செயலி மீது எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. 

இவ்வாறு வைரல் வீடியோ ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் பயனர்களின் தரவுகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வரிசையில், கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு தரவுகள் டிக்டாக் விதிகளை மீறியதாக கூறி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

டிரெண்ட் ஆன சர்ச்சை வீடியோவை, டிக்டாக்கில் சுமார் 1.3 கோடி ஃபாளோவர்களை கொண்டிருக்கும் ஃபைசல் சித்திக் என்ற நபர் பதிவேற்றம் செய்திருந்தார். வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து, டிக்டாக் செயலிக்கு தடை கோரியும், அதனை பதிவேற்றம் செய்தவரை நெட்டிசன்கள் ட்விட்டரில் கண்டித்தனர்.

இதுதவிர விதிகளை மீறும் டேட்டாக்களை பதிவேற்றம் செய்த அக்கவுண்ட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :