Telegram யில் இனி வீடியோ காலிங் செய்ய கூடிய புதிய வசதி அறிமுகம்.

HIGHLIGHTS

Telegramசெயலியில் வாய்ஸ் கால் அறிமுகம்

புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது

வீடியோ கால் அம்சத்துடன் புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஆல்ஃபா அம்சமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்படுகிறது.

Telegram யில் இனி வீடியோ காலிங் செய்ய கூடிய புதிய வசதி அறிமுகம்.

டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது.புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமின்றி அனிமேட்டெட் எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.  முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்டின் ப்ரோபைல் பக்கம் சென்று வீடியோ கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த இன்டர்ஃபேஸ் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் வீடியோவை ஆன் அல்லது ஆஃப் செய்வது மற்றும் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களிடையே மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

வீடியோ கால் அம்சத்துடன் புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஆல்ஃபா அம்சமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. டெலிகிராம் செயலியில் க்ரூப் வீடியோ கால் செய்வதற்கான வசதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த அம்சத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் டெலிகிராம் சாட்களில் ஸ்கிரால் செய்வதுடன், வீடியோவை பாஸ் செய்யாமல் மல்டி-டாஸ்கிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. அனைத்து அழைப்புகளும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo