Instagram தற்போது தனது பயனர்களுக்காக ஒரு புதிய மற்றும் மிகவும் பயனுள்ள அம்சத்தைச் டெஸ்ட்டிங் செய்து வருகிறது. சமீபத்திய லீக்கின்படி, இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலேயே உங்களால் விரைவில் ரீல்ஸ்களைப் பார்க்க முடியும். அதாவது, நீங்கள் விமானத்தில் இருந்தாலும், அடித்தளத்தில்(Underground) இருந்தாலும், அல்லது நெட்வொர்க் இல்லாத பகுதியில் இருந்தாலும், உங்கள் பொழுதுபோக்கு தடை இருக்காது .
மொபைல் டெவலப்பரும், நன்கு அறியப்பட்ட ஆப் டிப்ஸ்டருமான அலெஸாண்ட்ரோ பலூஸி (Alessandro Paluzzi) , இந்த புதிய அம்சம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் சோசியல் மீடியா தளத்தில் சில ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தைச் டெஸ்ட்டிங் செய்து வருவதை அந்த ஸ்கிரீன்ஷாட்கள் குறிப்பிடுகின்றன. இந்த அம்சத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பயனர்கள் இனி ரீல்ஸ்களைத் தானாகவே டவுன்ன்லோத் செய்துகொள்ள முடியும். இதன் மூலம், இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலேயே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க முடியும்
இந்த அம்சத்தை ‘ Manage Offline Downloads’ என்று அழைக்கலாம். இதன் மூலம், உங்கள் போனில் எந்தெந்த வீடியோக்களைப் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை இனி உங்களால் தீர்மானிக்க முடியும்.இதற்காக ஒரு சிறப்பு டாங்கில் (toggle) ஆட்டோமேட்டிக் டவுன்லோட்கலை இயக்க அல்லது மியூட் செய்ய உதவும் ஒரு பிரத்யேக மாற்று பட்டன் சேர்க்கப்படலாம். மேலும், நீங்கள் வைஃபை வழியாக மட்டுமே டவுன்லோட் செய்ய விரும்பினால், அதற்கும் ஒரு தனி விருப்பம் வழங்கப்படலாம்.
லீக் தகவல்களின்படி, ஒரே நேரத்தில் 10, 30 அல்லது 50 என எத்தனை ரீல்ஸ்களைச் சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் இன்ஸ்டாகிராம் உங்களை அனுமதிக்கும். மேலும், டவுன்லோட் செய்யப்பட்ட ரீல்ஸ்கள் உங்கள் வழக்கமான ஃபீடில் தோன்ற வேண்டுமா அல்லது ஒரு தனி டவுன்லோட் பிரிவில் தோன்ற வேண்டுமா என்பதையும் உங்களால் தீர்மானிக்க முடியும்.
இதையும் படிங்க:எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையுடன் மக்கள் மனதை குளிர வச்ச BSNL 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங்,டேட்டா நன்மை
இது முற்றிலும் புதிய கருத்து அல்ல. இது போன்ற அம்சங்கள் ஏற்கனவே இன்டர்நெட்டில் உள்ளன. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவை பயனர்களை ஆஃப்லைனில் உள்ளடக்கத்தைப் பார்க்க அனுமதிக்கின்றன. அவற்றின் ஸ்மார்ட் டவுன்லோட்ஸ் அம்சங்கள் உள்ளடக்கத்தைத் தானாகவே சேமிப்பதால், நீங்கள் ஒவ்வொரு முறையும் கைமுறையாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இப்போது, இன்ஸ்டாகிராமும் இது போன்ற ஒன்றைச் செய்யத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.