கூகுள் மேப்பின் 3 முக்கிய அம்சம் கஷ்டத்தில் இது கை கொடுக்கும்.

கூகுள் மேப்பின் 3 முக்கிய அம்சம் கஷ்டத்தில்  இது கை கொடுக்கும்.

கூகுள் மேப் இன்று நாம் செல்லும் பயணத்தை மிக எளிமையானதாகவும், குழப்பம் இல்லாததாகவும் மாற்றிவிட்டது என்று கூறினால் அது உண்மை தான். கூகுள் மேப்பில் தொடர்ந்து பல புதிய புதிய அப்டேட்கள் வழங்கி வருகிறது  என்பது நமக்கு தெரிந்ததே அதனை தொடர்ந்து மக்கள் இந்த கூகுள் மேப்பில் பல மடங்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது எவ்வித சந்தேகமும் இல்லை அந்த வகையில் நமக்கு மிகவும் பயன்படும் கூகுள் மிக முக்கியான மூன்று அம்சங்க எது என்று பார்ப்போம் வாருங்கள்.

Google Maps latest update : AR
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூகுள் பிக்சல் போன்களில் இந்த வசதியை உருவாக்கித் தந்தது கூகுள் மேப். இந்த மோடில், நீங்கள் ஒரு சாலையை நேரில் எப்படி காண்பீர்களோ அதே போன்று போன்களின் கேமரா ஃபீட்கள் மூலம், உண்மையான சாலையை மேப்பில் பார்க்க இயலும். தேவையில்லாமல் காதைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக உங்களின் பயணம் இருக்காது. traditional navigation button – க்கு மிக அருகில் இதற்கான பட்டனை க்ளிக் செய்து நீங்கள் ஆகுமெண்டட் ரியாலிட்டியில் மேப்பை காணலாம். ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ’மூவ்’ ஆகிக் கொண்டிருக்கும் போது தான் இந்த ஆப்சனை உங்களால் பெற இயலும்.

ட்ராஃபிக் அப்டேட் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு
நீங்கள் செல்லும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல், எவ்வளவு நேரத்தில் நீங்கள் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலும் போன்ற விசயங்களை மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் அறிவிக்கிறது. இதனால் உங்களின் பயணத்தை மிக வேகமாகவும், முன்கூட்டியேவும் திட்டமிட இயலும்.

சிறந்த உணவுகளை பட்டியலிடும் கூகுள் மேப் 
தற்போது நீங்கள் ஏதாவது உணவகங்களில் உணவு சாப்பிட செல்கின்றீர்கள் என்றால், அந்த உணவகத்தின் சிறந்த உணவுகள் எது என்பதை, அங்கு வரும் வாடிக்கையாளர்களின் ரிவியூ மூலமாக எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கூகுள் புதிய அப்டேட்களை தந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ள நிலையில் ஆப்பிள் போன்களில் இனிமேல் தான் இந்த அப்டேட் வர போகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo