இனி குழந்தைகளுக்கு கை செலவுக்கு உதவ தனி பேங்க் அக்கவுன்ட் தேவை இல்லை, GPay pocket money அம்சம் எப்படி செட் செய்வது?

HIGHLIGHTS

Google யின் GPay புதிய அம்சம் ‘Pocket Money என்ற பெயரில் அறிமுகம்

உங்களின் குழந்தைகளோ அல்லது உறவினர்க்கும் தேவைப்படும்போது

என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

Google யின் GPay புதிய அம்சம் ‘Pocket Money என்ற பெயரில் அறிமுகம், இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுதும் எளிதாக பணம் அனுப்பலாம் மற்றும் ஸ்மார்ட்டாக மாற்றும், இந்த அம்சத்தின் மூலம் உங்களின் குழந்தைகளோ அல்லது உறவினர்க்கும் தேவைப்படும்போது போதுமான அளவுக்கு பணம் அனுப்பலாம், இனி அதற்காக உங்கள் குழந்தைக்கோ அல்லது உறவினர்க்கோ தனியாக பேங்க் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்ற தொல்லை இல்லை, பணம் எங்கே, எப்படிச் செலவிடப்படுகிறது என்பதையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

Google Pay யின் Pocket Money அம்சம் என்றால் என்ன?

Pocket Money என்பது தற்பொழுது இருக்கும் UPI Circle போன்ற பகுதியாகும், இது பணம் செலுத்துவதை இன்னும் எளிதாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆக்குகிறது. இதில் ஒரு Primary user ((அதாவது பெற்றோர்/ உறவினர்) இருக்கலாம், இப்பொழுது உங்களின் பேங்க் அக்கவுன்ட் எந்த Secondary user (குழந்தைகள்) பணம் செலவழிக்க அனுமதி வழங்குகிறது.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகள் இனி தங்களின் சிறு தேவைகளுக்கு GPay மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம், ஆனால் அந்தப் பணம் பெற்றோரின் அக்கவுன்ட்களிலிருந்து கழிக்கப்படும். மேலும், லிமிட்களும் கட்டுப்பாடும் முழுமையாகப் பெற்றோரின் கைகளில் இருக்கும்.

Gpay Pocket Money

இதையும் படிங்க:WhatsApp யில் வந்துள்ள புதிய அம்சம், இப்பொழுது நம்பர் இல்லாமல் சேட்டிங் எப்படி செய்வது?

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

  • ப்ரைமரி யூசர் இருப்பதற்கு, உங்களுக்கு Google Pay-யின் ஒரு ஆப் யில் உள்ள பேங்க் அக்கவுன்ட் இருக்க வேண்டும்.
  • நீங்கள் அதிகபட்சமாக 5 செகண்டரி யூசர் பயனர்களைச் சேர்க்கலாம்.
  • உங்கள் UPI வட்டத்தில் ஒரு இரண்டாம் பயனரைச்(secondary user) சேர்க்க, பின்வருவனவற்றை உறுதிப்படுத்தவும்:
  • அவர்களுடைய நம்பர் உங்கள் போன் நம்பர்களில் சேமிக்கப்பட்டுள்ளது.
  • அவர்கள் தங்களது போன் நம்பரை கொண்டு கூகுள் பே ஆப்பை பதிவு செய்துள்ளனர்.
  • அவர்களிடம் UPI ஐடி அல்லது UPI சர்க்கிள் QR இருக்க வேண்டும்

இதில் செகண்டரி பேமன்ட் எப்படி மேஞ் செய்வது?

பாக்கெட் மணி அம்சத்தின் மிகப்பெரிய நன்மை அதன் முழுமையான கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகும். பெற்றோர்கள் இரண்டு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். முதல் விருப்பத்தில், நீங்கள் மாதத்திற்கு ₹15,000 வரை லிமிட்டை நிர்ணயிக்கலாம். இந்த லிமிட்டிர்க்குள் , ப்ரீபெய்ட் அலவன்ஸைப் போலவே, ஒவ்வொரு முறையும் கேட்கத் தேவையில்லாமல் குழந்தை தானாகவே பணம் செலுத்தலாம்.

இரண்டாவது வழிமுறையில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் ஒப்புதல் தேவைப்படுகிறது. முதலில் குழந்தை கோரிக்கையைச் சமர்ப்பிக்கும், உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே பணம் செலுத்தப்படும். இது சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.

மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக KYC சரிபார்ப்பு தேவைப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது உறவுமுறையையும் அரசாங்க அடையாள அட்டையையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அமைப்பை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருப்பதோடு, தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

இப்பொழுது UPI Circle போக்கட் மணி எப்படி செட் செய்வது?

  • உங்களின் மொபைல் போனில் முதலில் Google pay ஆப் திறக்கவும்.
  • அதில் ப்ரோபைல் என்பதற்கு சென்றவுடன் UPI Circle தட்டவும்.
  • இப்பொழுது UPI Circle. சென்று நீங்கள் எவ்வளவு பணம் செட் செய்ய விரும்புகிர்களோ அவ்வளவு பணம் செட் செய்யலாம்
  • .இப்பொழுது இரண்டாவது பயனராக யாருக்கு பக்கெட் மணி தர நினைக்கிருர்களோ அவர்களின் யூசர் நேம் சர்ச் செய்யவும்
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த நபரின் உங்களின் போன் காண்டக்ட் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் தேர்டுக்கப்பட்ட அந்த காண்டேக்ட்டை UPI Circle QR code .ஸ்கேன் செய்யவும்.
  • இப்பொழுது அனுமதிக்கு இப்போது உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். மாதாந்திர வரம்பை அமைக்கவும் அல்லது ஒவ்வொரு கட்டணத்திற்கும் உங்கள் ஒப்புதலை அமைக்கவும்.
  • பிறகு, உங்களுக்கும் இரண்டாம் நிலை பயனருக்கும் இடையிலான உறவுமுறை மற்றும் அவர்களின் ஆதார் எண் போன்ற விவரங்களை நிரப்பவும்.
    இறுதியாக, உங்கள் UPI PIN-ஐ உள்ளிட்டு அழைப்பை அனுப்பவும்.
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :