Jio, Airtel மற்றும் Vi தொடர்ந்து போட்டியிட வரும் Adani Group 5G ஏலத்தில் பங்கேற்கும்.

HIGHLIGHTS

இந்திய மொபைல் பயனர்களுக்கு ஒரு புதிய நல்ல செய்தி விரைவில் வெளியாக உள்ளது

இந்தியாவில் இணையத்தின் புதிய சகாப்தம் தொடங்கியது

5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

Jio, Airtel மற்றும் Vi  தொடர்ந்து போட்டியிட வரும் Adani Group 5G ஏலத்தில் பங்கேற்கும்.

இந்திய மொபைல் பயனர்களுக்கு ஒரு புதிய நல்ல செய்தி விரைவில் வெளியாக உள்ளது. இப்போது மொபைல் பயனர்கள் புதிய சிம் விருப்பத்தைப் பெறப் போகிறார்கள். அம்பானி குழு சில ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ நெட்வொர்க்கைத் தொடங்கியது மற்றும் . இப்போது அதானி க்ரூப் தனக்கென ஒரு புதிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை தொடங்க உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த நேரத்தில், இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், மூத்த தொழிலதிபருமான கெளதம் அதானி, தொலைத் தொடர்புத் துறையில் நுழையப் போகிறார். இது நடந்தால் தொலைத்தொடர்பு துறையில் அதானி குழுமத்தின் நேரடி போட்டி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களோடுதான் இருக்கும்.

5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

அந்த வகையில் இந்த ஏலத்தில் பங்கேற்க ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ள நிலையில், தற்போது அதானி குழுமமும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் 5ஜி அலைக்கற்றையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile