21 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் தரப்பினர் விளக்கம்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி நடித்து இருப்பதாக கூறும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பது, பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித்குமார் நடிப்பதாக வெளியான படத்தில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி நடித்து இருப்பதாக கூறும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு கனவான ஆகி சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி சினிமா உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.
Surveyஷாலினி ரீ-என்ட்ரி:
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ஷாலினி அஜீத் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் ஷாலினி அவர்கள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாலினி சினிமாவில் நடித்துள்ள தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் பலரும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படம்:
தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து லைக்கா இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இரண்டு இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியது:
இந்நிலையில் இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பது, பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித்குமார் நடிப்பதாக வெளியான படத்தில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. இது முற்றிலும் தவறான தகவல். ஷாலினி அஜித்குமார் மீண்டும் வெள்ளித்திரையில் காணலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான், அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதன் மூலம் ஷாலினி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது உறுதியானது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

