5G க்கு ரெடியாகி வரும் பல நாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்டர்நெட் வசதி இல்லாத 10 நாடுகள்.

HIGHLIGHTS

உள்ளங்கையில் வைத்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த உலகமும் உள்ளடங்கி இருக்கிறது.

அடுத்த கட்டமாக 5ஜி சேவைகளை உலக நாடுகள் அறிமுகம் செய்து வருகின்றன.

நீங்க முடியாத இடம்பிடித்துள்ள பல ஆப் மற்றும் சாப்ட்வேர்களுக்கு மிகவும் அடிப்படை என்பது இன்டர்நெட் ஆகும்.

5G க்கு ரெடியாகி வரும் பல நாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்டர்நெட் வசதி இல்லாத 10 நாடுகள்.

உள்ளங்கையில் வைத்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த உலகமும் உள்ளடங்கி இருக்கிறது. 2ஜி, 3ஜி, 4ஜி என தொலைத்தொடர்பு வசதிகளுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 5ஜி சேவைகளை உலக நாடுகள் அறிமுகம் செய்து வருகின்றன. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப், யூ-டியூப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு ஆப்கள், எண்ணற்ற வீடியோ ஆப்கள், கேம் ஆப்கள் என மக்களின் அன்றாட வாழ்வில் நீங்க முடியாத இடம்பிடித்துள்ள பல ஆப் மற்றும் சாப்ட்வேர்களுக்கு மிகவும் அடிப்படை என்பது இன்டர்நெட் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இவ்வளவு ஏன்! கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகெங்கிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகளில் பணி, கல்வி வகுப்புகள், மீட்டிங் போன்றவை இன்டர்நெட் பயன்படுத்தி நடைபெற்று வருகின்றன.

நீர், காற்று, உணவு, உடை போன்ற அடிப்படை அத்தியாவசிய பொருட்களில் ஒன்று போல இன்டர்நெட் மாறியுள்ளது. ஆனால் இவ்வளவு நவீனம் நிரம்பியுள்ள உலகில் இன்னமும் இன்டர்நெட் வசதி இல்லாமல் எண்ணிலடங்கா மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இந்த தகவல் உண்மை என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

இன்றைய நாள் வரையிலும் இன்டர்நெட் வசதி கிடைக்காத மக்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வாறான மக்களைக் கொண்ட 10 நாடுகளின் பட்டியல் இதோ…

இந்தியா : நம் நாட்டில் சின்னக் குழந்தைகள் கூட ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் கேம் என இன்டர்நெட் பயன்படுத்தி வரும் நிலையில், இன்னமும் அந்த வசதி இல்லாமல் பலர் இருக்கின்றனர். நம் நாட்டில் மொத்தம் 74.2 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதி கிடையாது. இது மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் ஆகும்.

பாகிஸ்தான் : எல்லா விஷயத்திலும் இந்தியாவோடு போட்டி போட நினைக்கும் பாகிஸ்தான் இதில் மட்டும் விட்டுக் கொடுத்து விடுமா என்ன! இந்த நாட்டில் 14.4 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதி கிடையாது. இது மொத்த மக்கள் தொகையில் 63.5 சதவீதமாகும்.

சீனா : குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் சீனாவும் இந்த பட்டியலில் விதிவிலக்கு அல்ல. அங்கு 42 கோடி பேர் இன்டர்நெட் வசதி கிடைக்காமல் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 29.1 சதவீதம் ஆகும்

நைஜீரியா : ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10.4 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை. இங்கு மொத்த மக்கள் தொகையில் 51 சதவீதம் பேருக்கு இன்டர்நெட் வசதி கிடைத்துள்ள போதிலும், எஞ்சியுள்ள 49 சதவீதத்தினருக்கு அது கிடைக்கவில்லை.

எத்தியோப்பியா : எத்தியோப்பியாவில் 8.9 கோடி பேர் இன்னமும் இன்டர்நெட் வசதி இல்லாமல் உள்ளனர். நாட்டின் மக்கள்தொகையில் இது 75 சதவீதம் ஆகும்.

வங்கதேசம் : இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் 68.5 சதவீத மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் உள்ளனர். அதாவது 11.4 கோடி பேர் இன்டர்நெட் வசதி இல்லாமல் உள்ளனர்.

காங்கோ : காங்கோவில் வெகுசில மக்களுக்கு மட்டுமே இன்டர்நெட் வசதி கிடைத்திருக்கிறது. இங்கு மொத்த மக்கள் தொகையில் 82.4 சதவீதம், அதாவது 7.7 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதி கிடையாது.

தான்சானியா : தான்சானியா நாட்டில் 4.6 கோடி பேர் இன்டர்நெட் தொடர்பில் இல்லை. இது நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதம் ஆகும்.

பிரேசில் : தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாக கருதப்படும் மேற்குலக நாடுகளும் இந்த பட்டியலில் இருந்து தப்பவில்லை. பிரேசில் நாட்டில் 4.9 கோடி பேருக்கு இணைய வசதி கிடையாது இது மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதமாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile