top 5 TV
2025 ஆண்டின் மிக சிறந்த டாப் ஸ்மார்ட் TV எதெல்லாம் என உங்களுக்கு தெரியுமா நாங்கள் இந்த ஆண்டின் பெஸ்ட் ப்ரெண்டின் புதிய ப்ளாக்ஷிப் மாடல் டிவியை கொண்டு வந்துள்ளோம் அந்த வகையில் இந்த ஆண்டின் பெஸ்ட் TV லிஸ்ட் இருக்கு இதில் Sony,Samsung, Thomson போன்ற பல பிரென்ட் இருக்கிறதா அவை என்ன என்ன முழுசா பார்க்கலாம் வாங்க.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட் டிவிகளில் Sony Bravia 5 ஒன்றாகும். இதன் 65-இன்ச் மினி-LED டிஸ்ப்ளே 4K ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது.இது படங்களை மிகவும் ஸ்மூத்தாக காட்டுகிறது. மேலும் இதில் Advanced AI Processor XR மூலம் குக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது.
XR பேக்லைட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் ஆழமான கருப்பு நிறத்தையும் மேம்படுத்தப்பட்ட பிரகாசத்தையும் வழங்குகிறது. இந்த டிவியில் நான்கு HDMI மற்றும் இரண்டு USB போர்ட்கள் உள்ளன. இது ALLM, PS5-குறிப்பிட்ட மேம்படுத்தல்கள், Acoustic மல்டி-ஆடியோ மற்றும் வாய்ஸ் ஜூம் 3 போன்ற பயனுள்ள அம்சங்களையும் வழங்குகிறது.
இந்த வருடம் நாம் பார்த்த மிக உயர்நிலை ஸ்மார்ட் டிவிகளில், Samsung Neo QLED 8K QN950F தனித்து நின்றது. இது 85 இன்ச் பெரிய QLED ஸ்க்ரீனை ஆன்டி-க்ளேர் தொழில்நுட்பம், 8K ரெசளுசன் மற்றும் 240Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது. அதன் எல்லையற்ற இன்ஃபினிட்டி ஏர் டிசைன் வ்யுவ் அனுபவத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது.
இந்த டிவியில் NQ8 AI Gen3 ப்ரோசெசர் உள்ளது, இது சாதாரண வீடியோவை கூட 8K தரத்திற்கு உயர்த்துகிறது. AI பயன்முறை உள்ளடக்கத்தின் அடிப்படையில் படம் மற்றும் ஒலியை தானாகவே சரிசெய்து, ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இது கலர் பூஸ்டர் ப்ரோ, ஆட்டோ HDR ரீமாஸ்டரிங் மற்றும் 8K மைக்ரோ டிம்மிங் போன்ற மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
Xiaomi X Pro QLED TV 4K Ultra HD ரெசளுசன் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரேட் (DLG 120Hz ரேட் ) கொண்ட பெரிய 65-இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது Dolby Vision, HDR10+, Reality Flow MEMC மற்றும் HLG ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது படத்தை மென்மையாகவும் கூர்மையாகவும் காட்ட உதவுகிறது.
இந்த டிவியில் மூன்று HDMI போர்ட்கள் உள்ளன, அவை கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் அல்லது ப்ளூ-ரே பிளேயரை எளிதாக இணைக்க உங்களை அனுமதிக்கின்றன. பென் டிரைவ் அல்லது வெளிப்புற ஹார்டு டிஸ்க்கை இணைப்பதற்கு இரண்டு USB போர்ட்களும் இதில் உள்ளன. ஒலி வெளியீடு சக்தி வாய்ந்தது, 34 வாட்ஸ் ஆடியோ வெளியீடு, ஒரு முழு ரூமையும் நிரப்ப போதுமானது. பர்போமன்சுக்காக, டிவி 2GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Thomson JioTele OS TV சீரிஸ் 55-இன்ச் மாடல் 2025 ஆம் ஆண்டில் சிறந்த சலுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 4K அல்ட்ரா HD தெளிவுத்திறன் மற்றும் 60Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய QLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. HDR உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது இதன் பிரகாசம் 450 நிட்கள் வரை அடையும்.
இதில் மிக சிறப்பு Sports Mode பாஸ்ட் வேகமாக மூவ்மென்ட் சீன மென்மையாகவும், கலர்களும் விவரங்களும் மிகவும் துடிப்பாகவும் இருக்கும். பெசல் இல்லாத டிசைனை பார்க்கும் இன்பத்தை மேலும் மேம்படுத்துகிறது. JioTele OS யில் செய்திகள், ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டைன்மென்ட் தொடர்பான 400க்கும் மேற்பட்ட இலவச நேரடி சேனல்களைப் பெறுவீர்கள்.
LG யின் 65-இன்ச் கொண்ட OLED டிவி 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன் கொண்டுள்ளது மிக சிறந்த சவுண்ட்க்கு 60 Watts ஆடியோ அவுட்புட் webOS 25, Digital Audio மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது LG Sound Sync மற்றும் இதில் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் AI Processor உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது.