பந்தா காட்டும் ஜியோவை ரூ,2 வித்தியாசத்தில் தோற்கடித்த BSNL, கம்மி விலையில் பல மடங்கு நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,997 யில் கூடுதல் கூடுதல் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் காலிங் தினமும் 2GB டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது, இதன் மறுபக்கம் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனமான Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,999 யில் வரும் இந்த திட்டத்தில் 98 நாட்களே வழங்குகிறது இந்த இரு நிறுவனத்தையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,997 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ,997 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதன் படி இந்த திட்டத்தின் வேலிடிட்டி முன்பு வெறும் 150 நாட்களாக இருந்தது ஆனால் இப்பொழுது 14 நாட்கள் எக்ஸ்ட்ரா போனஸ் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் பிறகு இப்பொழுது இதன் வேலிடிட்டியோ 164 நாட்களுக்கு இருக்கும் ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வெளிட்ட்டியின் படி இதன் டேட்டா 328GB டேட்டா வழங்கப்படும் .

ஆனால் இந்த திட்டத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மை மார்ச் 31 வரை மட்டுமே இதை தவிர இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் https://chatbot.bsnl.co.in யில் ரீச்சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:மக்களே குழம்பி போகும் அளவுக்கு Airtel மற்றும் Jio ரூ,349 யில் வரும் திட்டம் எது பெஸ்ட்?

Jio ரூ,999 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,999 ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்களுக்கு வழங்கப்படுகிறது இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் கஸ்டமர்களுக்கு தினமும் 100 SMS வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரும் டேட்டா நன்மை பற்றி பேசினால் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் , மொத்தமாக 196GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் 98 நாட்கள் வரை மிக சிறந்த நன்மையை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது சுமார் ₹35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோவை 18 மாதங்களுக்கு அக்சஸ் வசதியை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் ஜியோஹாட்ஸ்டாருக்கான 3 மாத சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

BSNL மற்றும் Jio இந்த ரூ, 999 vs 997 வரும் இந்த திட்டத்தில் மிக பெரிய வித்தியாசம் அதன் வேலிடிட்டி அரசின் பிஎஸ்என்எல் மொத்தமாக இதன் வேலிடிட்டியோ 164 நாட்களுக்கு வழங்குகிறது ஆனால் இதன் மறுபக்கம் jio 98 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது அதன் டேட்டா விசயத்திலும் ஜியோவை விட கூடுதலாக 132GB டேட்டா எக்ஸ்ட்ரா வழங்குகிறது இருப்பினும் கூகுள் ஜெமினி ப்ரோவைசப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் jiohotstar போன்ற நன்மை எக்ச்ற்றவாக jio வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :