Airtel Vs Jio ஒரே மாதுரியான ரூ,449 விலையில் வரும் திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது

Updated on 14-Jan-2026

Jio மற்றும் airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் ஒரே மாதுரியான திட்டத்தை கொண்டு வருகிறது மேலும் jio அம்பானியின் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்குகிறது மற்றும் Airtel யின் ரூ,449 கொண்ட திட்டமானது ஜயொவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது அதாவது இந்த திட்டத்தில் 4GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு திட்டங்களையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,449 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,449 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS மற்றும் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அக மொத்தம் இந்த திட்டத்தில் 84GB டேட்டா வழங்கப்படுகிறது அதன் பிறகு டேட்டா முடிவடைந்தால் (fair usage policy) படி குறையும் மேலும் இந்த திய்டத்தின் வேலிடிட்டி 28 சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமான 5G நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் பண்டிகைகால சிறப்பு சலுகையாக லிமிடெட் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது

ஜியோ சலுகைகள் குறைவாகவே உள்ளன. இந்த சலுகைகளில் புதிய கனெக்ஷனில் ஜியோஹோம் 2 மாத இலவச டெஸ்டிங் அடங்கும். பின்னர் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் உள்ளது. இறுதியாக, ஜியோஏஐகிளவுட் தளத்துடன் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படும். 4G FUP தரவைப் பயன்படுத்திய பிறகு ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.

Airtel ரூ,449 திட்டத்தின் நன்மை

Airtel ரூ,449 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீபெய்ட் பேக் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள், மொத்தம் 112 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் 30 ஜிபி கூகிள் ஒன் ஸ்டோரேஜ் , டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான சப்ஸ்க்ரிப்ஷன் , ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, ஆப்பிள் மியூசிக், அன்லிமிடெட் 5 ஜி டேட்டா, ஸ்பேம் எச்சரிக்கைகள் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோவில் 20க்கும் மேற்பட்ட OTT ஆப்ளுக்கான அக்சஸ் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க BSNL ஸ்பெஷல் பொங்கல் ஆபர் முழுசா ரூ,1 யில் ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா

Airtel VS jio இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?

இரு நிறுவனங்களும் தங்கள் திட்டங்களில் OTT மற்றும் கிளவுட் சேவைகளை இன்னும் ஆழமாக ஒருங்கிணைக்க முயற்சிப்பதால், வரும் மாதங்களில் இந்தப் போட்டி தீவிரமடையக்கூடும். குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் டிஜிட்டல் நன்மைகளைப் பெறுவதால், இந்தப் போட்டி பயனர்களுக்கு நன்மை பயக்கும்.

ஏர்டெல்லின் கூடுதல் 1 ஜிபி டேட்டா கஸ்டமர்களை ஈர்க்கும் என்று தொலைத்தொடர்பு நிபுணர்கள் நம்புகின்றனர், குறிப்பாக 5 ஜி நெட்வொர்க்குகளில் அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களை. மறுபுறம், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகள் ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட அதன் சுற்றுச்சூழல் அமைப்பின் நன்மையைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :