BSNL 2G -5G
BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) சமிபத்தில் அதன் 5G சேவையை இந்தியாவில் Q-5G என்ற பெயரில் அறிமுகம் செய்தது, அதாவது இதன் அர்த்தம் Quantum 5G ஆகும். மேலும் வெறும் 2G யில் இருந்த BSNL இப்பொழுது 5G வரை வளர்ந்து வந்தது மேலும் இன்னும் பல இடங்களில் 4G மற்றும் 5G டவர்களை நடும் முழு வேலைகளும் நடந்து வருகிறது அதாவது மற்றும் 4G/5G அப்க்ரேட் ஆகுவது எப்படி என்பதையும் பார்க்கலாம் வாங்க.
BSNL 2G/3G பயன்படுத்தும் கஸ்டமர்கள் தொடர்ந்து பல புகார்களை தெரிவித்து வந்தனர் அதாவது ஜியோ வந்த பிறகு 3G யிலிருந்து 4G அப்க்ரெட் ஆகினர் அதன் பிறகு மற்ற டெலிகாம் நிறுவனங்களான AIrtel Vodafone அதன் திட்டத்தை அப்க்ரேட் செய்ய Vodafone idea உடன் இணைத்தது அதே போல இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5G சேவையை அப்க்ரெட் செய்த பிறகு மக்கள் அரசு நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் தனியார் பக்கம் சாய ஆரம்பித்தனர் ஆனால் அதன் பிறகு கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதன் திட்டத்தின் விலையை அதிகரிக்க ஆரம்பித்தது அதன் பிறகு மீண்டும் அரசு நிறுவனம் பக்கம் சாய ஆரம்பித்தனர் அதன் பிறகு பிஎஸ்என்எல் கிராமப்புறங்களில் அதிகபடியான டவர்களை வைக்க ஆரம்பித்தது BSNL 2G லிருந்து 5G சிம்முக்கு அப்க்ரேட் ஆகுவது எப்படி என்பதை பார்க்கலாம்
2G இன் அடிப்படை ஸ்பீட்
1991 ஆம் ஆண்டில், அனலாக் சேவைக்குப் பதிலாக GMS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2G அல்லது இரண்டாம் தலைமுறை சேவைகளைத் தொடங்கிய முதல் நாடு பின்லாந்து. இது இந்த சேவையை டிஜிட்டல் யுகத்திற்கு கொண்டு வந்தது. இது புகைப்படம் மற்றும் மல்டிமீடியா செய்திகள் மற்றும் ஈமெயில்கள் போன்றவற்றுடன் டேட்டாவை பயன்படுத்துவதை சாத்தியமாக்கியது. ஆனால் அப்போது அதன் ஸ்பீட் சுமார் 50 kbps ஆக இருந்தது. அதிகபட்ச டவுன்லோட் ஸ்பீட் 64 kbps ஆக இருந்தது. இதனால்தான் 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் மொபைல் போன் சேவைகள் தொடங்கப்பட்டன.
3G வருகை
3G அதிகாரப்பூர்வமாக 2001 இல் ஜப்பானில் வந்தது. 3G யின் ஸ்பீட் 384 kbps முதல் 2 mbps வரை இருந்தது. இது வொயிஸ் காலுடன் வீடியோ கால்களை சாத்தியமாக்கியது. இதனுடன், மொபைல் இன்டர்நெட் , வீடியோ கான்பரன்சிங், ஆன்லைன் டிவி, ம்யுசிக் , 3D கேமிங், கோப்பு பரிமாற்றம் மற்றும் வழிசெலுத்தல் வரைபடங்கள் போன்ற வசதிகளால் உலகம் வேகமாக மாறியது.
4G பயணம்
நான்காவது தலைமுறை வயர்லெஸ், அதாவது 4G, 2007 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. அதன் முதல் பிஸ்னஸ் பயன்பாடு 2009 யில் நார்வேயில் தொடங்கியது. ஆனால் அதன் உண்மையான ஆரம்பம் 2010-2011 இல். இந்தியாவில், 2015 க்குப் பிறகு 4G அனைவருக்கும் ஒரு ஈர்ப்பாக மாறியது. இதன் ஸ்பீட் 100 Mbps முதல் 1 Gbps வரை உள்ளது. இதன் காரணமாக, HD தொழில்நுட்பம் நுகர்வோரை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் சென்றது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் OTT சந்தை வேகமாக வளர்ந்தது. சாப்ட்வேர் , கேம்கள்மற்றும் திரைப்படங்களைப் டவுன்லோட் பணிகளும் எளிதாகவும் வேகமாகவும் நடக்கத் தொடங்கின.
BSNL கிராமபுரங்களில் இருந்து நகரம் வரை இந்தியா முழுக்க 94,500 4Gடவர்களை நட்டு வைத்துள்ளது மேலும் ஏற்கனவே அதன் 5G சேவையை ஆரம்பித்த நிலையில் தனியார் நிறுவனத்தை விட அரசு நிறுவனம் குறைந்தது இல்லை என நெட்வொர்க் பிரச்சனை சமளிக்க மும்புரமாக வேலை பார்த்து வருகிறது மேலும் கிராம முதல் நகரம் வரை அனைவருக்கும் Jyotiraditya Scindia 4G மற்றும் 5G கிடைக்கும் என கூறினார்.
இதையும் படிங்க BSNL பம்பர் ஆபர்:அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா 2 மாத வேலிடிட்டியுடன் ரூ,350க்குள் பக்கா மாஸ் சம்பவம்