Vivo V70 vs OnePlus 15R இந்த இரு ஹை எண்டு ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் ?
Vivo சமீபத்தில் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Vivo V70 ஐ அறிமுகப்படுத்தியது, அதனை தொடர்ந்து இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் அறிமுகமான அதே ரூ,50,000 விலை ரேஞ்சில் இருக்கிறது இந்த இரு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், பேட்டரி மேலும் Vivo V70 ஒரு Snapdragon 7 Gen 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் OnePlus 15R ஒரு Qualcomm Snapdragon 8 Gen 5 ப்ரோசெசர் கொண்டுள்ளது போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
SurveyVivo V70 vs OnePlus 15R விலை தகவல்
Vivo V70 8GB/256GB வகை ₹45,999க்கும் , 12GB/256GB வகை ₹49,999 க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. OnePlus 15R 12GB/256GB வகை ₹47,999 க்கும், 12GB/512GB வகை ₹52,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Vivo V70 vs OnePlus 15R டிஸ்ப்ளே :-
Vivo V70 போனில் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் உடன் 2750×1260 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட், 459 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 5000 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. அதுவே OnePlus 15R போனில் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2800×1272 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 165Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது.
Vivo V70 vs OnePlus 15R ப்ரோசெசர்:-
விவோ V70 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 5 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. OnePlus 15R ஆனது Android 16 அடிப்படையிலான OxygenOS 16 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க:7600mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் iQOO யின் புதிய போன் அறிமுகம்
Vivo V70 vs OnePlus 15R கேமரா:-
Vivo V70-ன் பின்புற கேமராவில்f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.65 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிர்க்காக f/2.0 அப்ரட்ஜர் உடன் 50-மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது.
அதுவே OnePlus 15R-யின் பின்புற கேமராவில் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் உடன் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிர்க்காக f/2.0 அப்ரட்ஜருடன் 32-மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது.
Vivo V70 vs OnePlus 15R பேட்டரி பேக்கப் :-
Vivo V70 ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. OnePlus 15R ஆனது 80W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Vivo V70 vs OnePlus 15R கனேக்ட்டிவிட்டி
Vivo V70 இல் உள்ள கனேக்டிவிட்டியோ விருப்பங்களில்5G, டூயல் சிம், ப்ளூடூத் 5.4, USB டைப்-C 2.0, GPS, OTG மற்றும் NFC ஆகியவை அடங்கும். OnePlus 15R இல் Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, NFC, 5G, டூயல் 4G VoLTE மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile