Tecno Pova 8 vs Motorola Edge 70 Fusion (1)
Tecno சமிபத்தில் இந்திய சந்தையில் Tecno Pova 8 அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Motorola Edge 70 Fusion களத்தில் இறக்கியுள்ளது மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி ஒப்பிட்டு போன்றவற்றை எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
டெக்னோ போவா 8, 6ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹29,999 ஆகவும் , 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹31,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹29,999 ஆகவும் , 8ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹31,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 8, 1080×2344 பிக்சல்கள் ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 381ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 950 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.76-இன்ச் ஃபுல் HD+ IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.78-இன்ச் குவாட்-கர்வ் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
டெக்னோ போவா 8, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7100 ப்ரோசெசரில் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது.
டெக்னோ போவா 8, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட HiOS 16-இல் இயங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட Hello UI-இல் இயங்குகிறது.
டெக்னோ போவா 8-ல் பின்புறம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதில் 13 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன்-ல் பின்புறம் OIS ஆதரவுடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ மற்றும் ஒரு டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதில் 32 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.
பேட்டரி பேக்கப்
இதையும் படிங்க Redmi Turbo 5 vs OnePlus Nord 6: மார்க்கெட்டுக்கு புதுசா வந்த போனை வாங்கும் முன் ஓவர் ஆல் இதில் எது பெஸ்ட் பாருங்க
டெக்னோ போவா 8, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
டெக்னோ போவா 8, 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எஃப்சி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எஃப்சி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது.