Apple iPhone 16e VS iPhone 16: இந்த இரு போனில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்

Updated on 20-Feb-2025

Apple நிறுவனம் தனது மிகவும் குறைந்த விலையில் iphone 16e- அறிமுகப்படுத்தியுள்ளது இதற்க்கு சரியான போட்டியை தருவகையில் . கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 உடன் ஐபோன் 16e ஒப்பிட்டு இந்த போனின் டிஸ்ப்ளே, கேமரா ப்ரோசெசர் போன்றவற்றை ஒப்பிட்டு இந்த போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Apple iPhone 16e VS iPhone 16 விலை தகவல்:

ஐபோன் 16e-யின் 128 ஜிபி ஸ்டோரேஜ் யின் விலை ரூ.59,900, அதுவே இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.69,900 மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. iphone 16 விலை 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ.76,900 ஆகவும், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ.89,900 ஆகவும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் ரூ.1,09,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 16e Launched India

Apple iPhone 16e VS iPhone 16: டிஸ்ப்ளே

ஐபோன் 16e ஆனது 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவை 2532×1170 பிக்சல்கள் ரேசளுசன் , 800 nits ப்ரைட்னாஸ் மற்றும் 1200 nits ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 16 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1179×2556 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 2000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

Apple iPhone 16e VS iPhone 16: ப்ரோசெசர்

இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், ஐபோன் 16e 6-கோர் A18 ப்ரோசெசறை கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 16 இல் ஆக்டா கோர் ஆப்பிள் A18 சிப்செட் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 16e VS iPhone 16: ஒப்பரேட்டிங் சிஸ்டம்

ஐபோன் 16e ப்லார்த்பார்மனது iOS 18 யில் இயங்குகிறது. அதே நேரத்தில், ஆப்பிள் ஐபோன் 16 ஒப்பரேட்டிங் சிஸ்டம் பொறுத்தவரை iOS 18 யில் இயங்குகிறது. இப்பொழுது இதன் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் ஐபோன் 16e 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 16 யின் ரேம் வெளியிடப்படவில்லை, மேலும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்கள் கொண்டுள்ளது .

Apple iPhone 16e VS iPhone 16: கேமரா

ஐபோன் 16e-யின் பின்புறம் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவையும், f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஐபோன் 16 யின் பின்புறத்தில் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 48-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 12-மெகாபிக்சல் TrueDepth செல்ஃபி கேமரா உள்ளது.

Apple iPhone 16e VS iPhone 16:கனெக்டிவிட்டி

ஐபோன் 16e யில் உள்ள கனெக்சன் விருப்பங்களில் இரட்டை சிம், வைஃபை 7, புளூடூத் 5.3, ரீடர் மோட் கூடிய NFC, GPS, GLONASS, கலிலியோ, QZSS மற்றும் BeiDou ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், ஐபோன் 16 யில் கனெக்சன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத், GPS, NFC மற்றும் USB டைப் C போர்ட் ஆகியவை அடங்கும்.

ஐபோன் 16e 146.7 mm நீளம், 71.5 mm அகலம், 7.8 mm திக்னஸ் மற்றும் 167 கிராம் எடை கொண்டது. ஐபோன் 16 நீளம் 147.6 mm, அகலம் 71.6 mm, திக்னஸ் 7.8 மிமீ மற்றும் 170 கிராம் எடை கொண்டது.

இதையும் படிங்க:Vivo V50 vs OPPO Reno 13 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :