Window AC vs Desert Air Cooler
இந்தியாவில் தொடர்ந்து கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது இப்பொழுது மிக சிறந்த கம்மி விலையில் AC வாங்கணும் என்ற தேடலில் இறங்கியுள்ளனர், ஆனால் எசிவாங்கலம்ன அதிக விலை போட்டு ஏழ்மையான குடும்பத்தில் வாழ்பவருக்கு சாத்தியமில்லை, ஆனால் இந்த வெயிலின் வெப்பத்தை தணிக்க நல்ல ஏர் கூலர் சிறிய இடத்தில் வைக்கவேண்டும் என நினைத்தால் ஆனால் இப்பொழுது Window AC அல்லது Desert Air Cooler வாங்கலாம் இந்த இரண்டில் எது மிக சிறந்த கூலிங் மற்றும் நன்மையை தருகிறது என பார்க்கலாம் வாங்க.
Window AC ரெப்ரஜிரேஷன் டெக்னாலஜியில் வேலை செய்கிறது, இது அறையிலிருந்து சூடான காற்றை உள்ளிழுத்து, குளிர்பதனப் பொருள் நிரப்பப்பட்ட குளிர்ச்சியான சுருள்கள் வழியாகச் செலுத்துகிறது. இந்தச் செயல்பாட்டில், காற்றிலிருந்து வெப்பம் அகற்றப்பட்டு, கூளிங்கான , உலர்ந்த காற்று மீண்டும் ரூமுக்கு செலுத்தப்படுகிறது.
இதன் மறுபக்கம் Desert Air Cooler பற்றி பேசினால், இது எவப்ரேட்டிவ் கூலிங் அடிபடையின் கீழ் இயங்குகிறது, அதாவது இது வெளி காற்றை இழுத்து கொடுப்பதுடன் அந்த காற்று தண்ணீருடன் கலப்பதால் மிக சிறந்த கூலிங் வழங்குகிறது , நீர் ஏவப்ரெட் ஆகும்போது , காற்று குளிர்ச்சியடைந்து, பின்னர் ஒரு பேன் மூலம் ரூமை முழுவதும் சுற்றோட்டம் செய்யப்படுகிறது. இந்த முறை குறிப்பாக இது வெயிலின் வெப்பத்தினால் சூடான காற்று வீசும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.
விண்டோ ஏசி மெயின்டைனன்ஸ் ப்ரோபெசனலனதாகும் , அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியமாகும். இதில் ஃபில்டரை சுத்தம் செய்தல், உள்ளக பாகங்களை சரி செய்தல், மற்றும் சில சமயங்களில் கேஸை மீண்டும் நிரப்புதல் ஆகியவை அடங்கும். முறையான பராமரிப்பு செய்யப்படாவிட்டால், கூலிங் பர்போமான்ஸ் நேரடியாகப் பாதிக்கப்படலாம்.
டெசர்ட் ஏர் கூலர்களைப் பராமரிப்பது மிகவும் எளிதானது, மேலும் அவற்றை வீட்டிலேயே கையாளலாம். கூலிங் பேட்கள் மற்றும் தண்ணீர் டேங்கை தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். உகந்த கூளிங்க்க்கு அடிக்கடி தண்ணீரை நிரப்ப வேண்டியிருந்தாலும், ஒட்டுமொத்தப் பராமரிப்பு செலவு குறைவானது மற்றும் எளிதானது.
Window AC சாதரணமாக 800 லிருந்து 1,500வாட் வரையிலான எலெக்ட்ரிசிட்டி அல்லது மேலும் அதை அதிகம் பயன்படுத்தி வந்தால் அதற்க்கும் மேல் வாட் அதிகரிக்கலாம் மேலும் இப்பொழுது மின்சார பில் எவ்வளவு வரும் என்று கேள்வி வரும் அதாவது ரூ,2,000 லிருந்து ரூ,4,500 வரை அதிகரிக்கலாம் உங்களின் பயன்பாட்டை பொருத்தது அதவது எளிதாக சொல்ல வேண்டும் என்றால் மின்சாரம் இது அதிகம் இழுக்க கூடியதாக இருக்கும்
இதன் மறுபக்கம் , Desert air cooler மிகவும் குறைந்த மின்சாரத்தையே பிடிக்கிறது அதாவது இதில் ஒட்டுமொத்தமாக 150 லிருந்து 250 வாட் வரை மட்டுமே எடுத்து கொள்கிறது மேலும் தினசரி அதிக பயன்பாட்டிற்கு பிறகும் இதில் ரூ,170 லிருந்து ரூ,340 வரை கரண்ட் பில் வரலாம்.
விலையைப் பொறுத்தவரை, ஒரு 1.5-டன் விண்டோ ஏசியின் விலை பொதுவாக ₹25,000 முதல் ₹38,000 வரை இருக்கும். இது பிராண்ட் மற்றும் அம்சங்களைப் பொறுத்து சற்றே மாறுபடலாம். மறுபுறம், டெசர்ட் ஏர் கூலர்கள் மிகவும் மலிவானவை; அவற்றின் அதிகத் திறன் கொண்ட மாடல்கள் பொதுவாக ₹9,500 முதல் ₹15,000 வரை கிடைக்கின்றன. இதன் மூலம், பட்ஜெட் கண்ணோட்டத்தில் ஏர் கூலர்கள் மிகவும் கட்டுப்படியான ஒரு தேர்வாக அமைகின்றன.
இதையும் படிங்க:ஸ்மார்ட் AC என்றால் என்ன? உங்கள் ஏசியை Wi-Fi உடன் கனெக்ட் செய்வது எப்படி
நீங்கள் அதிக ஹுமிடிட்டி உள்ள பகுதியில் வசித்து, உங்கள் ரூமில் கச்சிதமான, கட்டுப்படுத்தப்பட்ட கூலிங் தேவைப்பட்டால், ஒரு விண்டோ ஏசி ஒரு நல்ல தேர்வாகும். இது எல்லாப் பருவங்களிலும், குறிப்பாக மழைக்காலத்தில், சிறந்த கூளிங்கை வழங்குகிறது.
ஆனால், நீங்கள் வரண்ட பகுதியில் வசித்து, உங்கள் மின்சாரக் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க விரும்பி, குறைந்த செலவில் குளிர்ந்த காற்று தேவைப்பட்டால், டெசர்ட் ஏர் கூலர் ஒரு சரியான தேர்வாகும். இது மலிவானது மற்றும் புத்துணர்ச்சியான காற்றுடன் கூளிங்கை வழங்குகிறது.