EPFO withdraw
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி PF பணம் எடுப்பதற்கு விதிமுறை வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் கீழ், பயனர்கள் தங்களின் PF அக்கவுன்டிலிருந்து 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டுக்கு பிறகே பணம் எடுக்க முடியும். மேலும் ஒவ்வொரு பண தேவைக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் இருக்கிறது மேலும் இதில் கல்யாணம், படிப்பு, மருத்துவ சிகிச்சை, வீடு வாங்க ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கிறது மற்றும் எத்தனை முறை எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் முழுசா பார்க்கலாம் வாங்க.
உங்கள் குடும்பம் அல்லது எதாவது ஒரு மருத்துவ காரனத்திற்காக பணம் தேவை ஏற்ப்பட்டால் உங்களின் PF அக்கவுன்டிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் அதற்காக எந்த லிமிட்டும் இல்லை.
உங்களின் சொந்த மற்றும் குழந்தையின் உயர் கல்வி போன்றவைக்கு அதிகபட்சமாக 10 முறை எடுக்கலாம்.
தங்களின் சொந்த கல்யாண தேவை மற்றும் குடும்பத்தில் குழந்தைகள் மற்றும் அக்கா, தங்கை, அண்ணன் போன்றவவர்களுக்கான திருமண செலவுக்காக 5 முறை வரை பணம் எடுக்கலாம்.
நீங்கள் புதியதாக வீடு கட்டி கொண்டிருன்தலோ அல்லது பிளாட் அல்லது இடம் வாங்குவதற்கு மேலும் நீங்கள் உங்கள் வீட்டின் கடன் (home loan) அல்லது வீட்டை புதுப்பதர்க்கு போன்றவற்றிக்கு அதிகபட்சமாக 5 முறை எடுக்கலாம்.
எதாவது அவசர நிலை சூழ்நிலை ஏற்ப்பட்டால் அதாவது விபத்து சார்ந்த பேரழிவு ஏற்ப்பட்டலோ சர்வதேச நோய் தொற்று போன்றவை இருந்தால் அதில் ஒரு ஆண்டுக்கு ௨ முறை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
உங்களின் வேலை அல்லது சேவையிந 12 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் உங்களின் PF யின் சேமிப்பு தொகையிலிருந்து 75% வரை பணம் அட்வான்ஸ் எடுக்கலாம். இதில் உங்களுடைய மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள், அத்துடன் அவற்றின் மீது ஈட்டப்பட்ட வட்டி ஆகிய இரண்டும் அடங்கும்.
இதையும் படிங்க:உங்கள் போன் சிறந்த ரகசிய ஸ்கேனர் எந்த ஆப்பையும் இன்ஸ்டால் செய்யாமல் இந்த 7 விஷயம் செய்யலாம்
நிதியைத் திரும்பப் பெற, நீங்கள் EPFO-வின் இணையதளத்தில் (உறுப்பினர் இ-சேவா இணையதளம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் யுஏஎன் (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) செயலில் உள்ளதா என்பதையும், உங்கள் கேஒய்சி (ஆதார், பான், பேங்க் அக்கவுண்ட் விவரங்கள்) அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.