IRCTC: ரயில் வெகு நேரமாகியும் வரவில்லை, AC வேலை செய்யாதபோது உங்களின் பணம் வாபஸ் எப்படி பாருங்க

Updated on 01-Jul-2025

IRCTC REFUND RULES :நீங்கள் பயணிக்கும் அந்த ரயிலுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கும் மண உளைச்சல் ஏற்ப்படுகிறதா அல்லது AC சரியாக வேலை செய்யவில்லை இது மட்டுமில்லாமல் ரயிலின் ரூட் திடிரென வேற பாதையில் மாற்றப்பட்டதா இது போன்ற பல பிரச்சனைக்கு தற்பொழுது IRCTC தங்களின் பயணிகளுக்கு மிக பெரிய நன்மையை கொண்டு வந்துள்ளது இதில் வரும் பிரச்சனயில் எதாவது இருந்தால் நீங்கள் எளிதாக TDR பைல் அதாவது (Ticket Deposit Receipt) மூலம் முழு பணத்தை பெற முடியும், இது குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு இது மிக பெரிய நன்மை தரும் சரி வாங்க இந்த செயல்முறை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

TDR என்றால் என்ன

TDR என்றால் Ticket Deposit Receipt ஆகும் அதாவது நீங்கள் பயணிக்கும் ரயிலில் AC சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது திடிரென வேறு ஒரு பாதையில் ரூட் மாற்றி விட்டாலோ நீங்கள் IRCTC வெப்சைட் மூலம் TDR பில் செய்யலாம் இதன் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பணத்தை(refund) திரும்ப பெற முடியும்.

இதையும் படிங்க:IRCTC பயனர்கள் நாளை முதல் இதை செய்யவில்லை என்றால் டிக்கெட் புக் செய்ய முடியாது

முழு Refund நன்மை எப்பொழுது பெற முடியும் ?

  • முதலாவது உங்களின் ரயில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் வரவில்லை மற்றும் அதன் பிறகு நீங்கள் பயணிக்க விரும்பாத போது நீங்கள் TDR பில் செய்யலாம்.
  • இரண்டாவதாக நீங்கள் ரயில் புறப்புடுவதர்க்கு முன்பதாக நீங்கள் கேன்ஸில் செய்தால் உங்களின் பணத்திலிருந்து எந்த பணமும் கழிக்கப்படாது.
  • நீங்கள் பயணிக்கும் AC கோச்சில் மற்றும் AC 20 மணி நேரமாகியும் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் எளிதாக பணம் வாபஸ் பெற முடியும்.

TDR ஆன்லைனில் எப்படி பைல் செய்வது?

இந்த எளியமுறை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எளிதாக TDR பைல் செய்யலாம் என்பதால் பார்க்கலாம் வாங்க.

  • நீங்கள் www.irctc.co.in வெப்சைட்டுக்கு சென்று உங்களின் அக்கவுண்ட் லோகின் செய்யலாம்.
  • அதன் பிறகு ‘My Account’ யில் ‘My Transactions’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு ‘File TDR’ என்பதை செலக்ட் செய்யவும்.
  • அதன் பிறகு சரியான காரணத்தை ட்ராப்டவுனில் தேர்டுக்க வேண்டும் உதரணமாக AC வேலை செய்யவில்லை அல்லது தடம் மாற்றப்பட்டது (Route change)
  • மேலும் பயணம் செய்யாத பயணிகளின் பெயரை தேர்டுத்து ‘File TDR’என்பதை க்ளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.
  • மேலும் நீங்கள் Confirm செய்யுமுன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரக்சன் படிக்கவும்.
  • அது முடிந்த பின் TDR வெற்றிகரமாக பைல் செய்யப்பட்டது என்ற மெசேஜ் பார்க்கலாம்.

முக்கிய குறிப்பு

  • இது முக்கியமாக IRCTC மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும்போது மட்டுமே இந்த சேவையானது வேலை செய்யும்.
  • IRCTC மூலம் சிக்கலை சரியாக சரிபார்த்த பிறகு தான் நீங்கள் மீண்டும் பணம் பெற முடியும்.
  • TDR குறிப்பிட்ட நேரத்திற்க்குள் பதிவகிரூக்க வேண்டும்
  • உங்கள் PNR மற்றும் பயணிக்கும் தகவலை நீங்கள் கையில் வைத்திருப்பது அவசியமாகும்.
  • ரயில் தாமதமாக வரும்போது TDR பில் செய்வதன் மூலம் IRCTC பணம் திரும்ப வழங்கும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :