IRCTC and aadhaar link
IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் புக்கிங் விதி ஜூலை 1 முதல் மாற இருக்கிறது இந்திய ரயில்வேயில் மாற்றம் கொண்டு வந்துள்ளது அதில் IRCTC ஆப் அல்லது வெப்சைட்டில் உங்களின் Aadhaar Card லிங்க் செய்ய வேண்டும், அதாவது நீங்கள் ஆதார் கார்டுடன் லிங்க் செய்யவில்லை என்றால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது இதனுடன் ஜூலை 15 முதல் ஆன்லைனில் தத்கால் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஆதார் நம்பர் உட்பட்ட OTP போடா வேண்டும் இந்த நடவடிக்கை எடுக்க காரணம் அனைவரும் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய கிடைக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம்
IRCTC வெப்சைட்டிலிருந்து கிடைத்த தகவலின் படி, ஒருவருடைய IRCTC அக்கவுன்ட் ஆதார் உடன் லிங்க் செய்யப்பட்டிருந்தால் இது ஒரு மாதர்த்திகுள் 24 டிக்கெட் புக்கிங் செய்ய முடியும், ஆதார் கார்ட் லிங்க் செய்யாத IRCTC அக்கவுன்டிலிருந்து ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும். இதன் நன்மை என்ன்வென்ற ஒரு மாதத்திற்க்கு அதிக அளவில் டிக்கெட் புக் செய்ய முடியும் மேலும் சில நேரங்களில் நாம் குடும்பத்தினருடன் பயணிக்கிறோம் அப்பொழுது ஆதார் கார்ட் லிங்க் செய்யப்பட்டிருந்தால் அதிக டிக்கெட் புக் செய்யலாம் எனவே ஜூலை 1 முதல் மாற இருக்கும் இந்த புதிய விதி முன் நீங்கள் உங்களின் IRCTC அக்கவுன்ட் உடன் ஆதார் கார்ட் லிங்க் செய்யுங்க அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க Free Aadhaar அப்டேட் இந்த தேதிக்குள் மாற்றி கொள்ளுங்க இல்லினா வருத்தப்படுவிங்க
இந்தச் செயல்பாட்டின் போது, சில பயனர்களின் பெயர் IRCTC டேட்டா மற்றும் ஆதார் அட்டைத் டேட்டக்களுடன் பொருந்தவில்லை என்றால் தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஒரு பயனர் IRCTC வாலட்டுடன் இணைக்க விரும்பும்போதும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற உங்கள் விவரங்கள் IRCTC அக்கவுன்ட் மற்றும் ஆதார் கார்டில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது அவ்வாறு இல்லையென்றால், முதலில் IRCTC அக்கவுண்டில் உங்கள் விவரங்களை மாற்றவும். விவரங்களை மாற்ற முடியாவிட்டால், நீங்கள் ஒரு புதிய IRCTC யூசர் ஐடியை உருவாக்கலாம்.