இந்திய அரசு சிப் அடிபடையிலான e-passport அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதன் மூலம் பல மடங்கு பாதுகாப்பு மற்றும் டூப்ளிகேட் டேட்டா போன்றவற்றை தவிர்க்கலாம். இந்த புதிய அம்சம் அட்வான்ஸ்ட் Radio Frequency Identification (RFID) சிப் கொண்டுள்ளது அதாவது இது ஒரு காகிதத்தில் உள்ள அனைத்து தகவலையும் அந்த சிப்பில் பெற முடியும் ஏப்ரல் 1, 2024 அன்று பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட்கள் தற்போது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வழங்கப்படுகின்றன. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது வரும் மாதங்களில் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்களை வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய இ-பாஸ்போர்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
e-Passport என்பது இது அண்டெனா மற்றும் ரேடியோ ப்ரிகுவன்ஷி ஐடெடிபிகேசன்(RFID) சிப் சப்போர்டுடன் வருகிறது உங்களின் இன்டிக்ரேடட் பாஸ்போர்ட் ஸ்பெசல் உள்ளமைக்கப்பட்ட பிசிக்கல பாஸ்போர்ட் புக்லெட் வடிவில் கிடைக்கும் மேலும் இதன் முன் பக்கத்தில் கோல்ட்-கலர் சிம்பல் மூலம் இது எந்த நாட்டுடயது என அடையாளம் காணலாம்
இந்த இ-பாஸ்போர்ட்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகப் போட்டோ, பிங்கர்ப்ரின்ட், பெயர், பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் டேட்டாக்கள் இருக்கும். இந்தத் டேட்டாக்கள் அனைத்தும் Basic Access Control (BAC), செ Passive Authentication (PA), மற்றும் Extended Access Control (EAC). போன்ற உலகளாவிய பாதுகாப்பு நெறிமுறைகளால் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இது டேட்டா சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், இம்மிக்ரேசன் சோதனைகளை விரைவுபடுத்தி மேனுவல் வெரிபிகேசன் தவிர்க்கும்.
குறிப்பாக, அமெரிக்கா, கனடா, பிரேசில், இத்தாலி, மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் பல நாடுகள் உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் தற்போதைய பாஸ்போர்ட்டுகளை இ-பாஸ்போர்ட்டுகளுடன் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் அவற்றின் எக்ஸ்பைர் தேதி வரை செல்லுபடியாகும்.
இதையும் படிங்க:அடுத்த 2-3 நாட்களுக்கு ATM மூடப்படும் வைரல் ஆகும் மெசேஜ் பீதியில் மக்கள் இது உண்மையா முழுசா பாருங்க