air cooler (
கோடைகாலத்தின் வெயில் பொளந்து கட்டுகிறது AC வாங்க வேண்டும் என்றால் ஏசியின் விலையோ அதிகம் இருக்கும் இதன் காரணமாக நம்மால் AC வாங்குவது கடினம், எனவே நாம் Air cooler வாங்கலாம் என்றால் அதில் பல AIr cooler மாடல் இருக்கிறது, மேலும் ஒவ்வொரு கூலரும் ஒவ்வொரு ரூம் சைஸ் ஏற்ப பயன்படுத்தினால் மட்டுமே சிறந்த கூலிங் தரும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு கூலர் வாங்க நினைத்தாள் முதல் பயன்பாட்டுக்கு ஏற்ப வாங்க வேண்டும் சிறந்த கூலிங் பர்போமான்ஸ் தரும் சரியான கூலரை எப்படி தேர்ந்து எடுப்பது பார்க்கலாம் வாங்க.
ஏற்கூலரில் இருக்கும் இயற்கையான செயல்பாடை ஏவப்ரேடிவ் கூலிங் என கூறப்படுகிறது, இது சுற்றிலும் இருக்கும் சூடக்ன காற்றை இழுத்து இது தண்ணீருடன் கலந்து அதன் பிறகு கூலிங் பேட் மூலம் கூளிங்கான காற்றை தருகிறது. மேலும் நீர் ஆவியாகும்போது, காற்று உடன் கலந்து கூளிங்கை தருகிறது , பின்னர் ஒரு பேன் மூலம் ரூம் முழுக்க செலுத்தப்படுகிறது. இதன் மூலம் சிறந்த கூலிங் தருகிறது, அதுவே வறண்ட(Dry) வானிலை மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுகிறது.
ஏர் கூலர் பல விதமான கூலர் இருக்கிறது அதில் டெசர்ட் கூலர் என்பது பெரிய ரூம் மற்றும் ஓபன் ஸ்பேஸ் போன்ற இடங்களில் வைக்கலாம் இதன் மூலம் பவருள்ளன ஏர் ப்ளோ மற்றும் மிக சிறந்த கூலிங் கவரேஜ் வழங்குகிறது, இதன் இரண்டாவது வகை பர்சனல் கூலர் இது காம்பேக்ட் மாடல் இது சிறிய சைஸில் இருப்பதால் இது சிறிய ரூம் மற்றும் பெட்ரூமுக்கு சிறந்தது மற்றும் மூன்றாவதாக வருவது டவர் கூலர் உடன் ஸ்லிம் டிசைன் கொண்டுள்ளது டீசன்ட் கூலிங் பர்போமான்ஸ் வழங்குகிறது இது , இடவசதி குறைவாக உள்ள வீடுகளுக்கு இவை பொருத்தமானவையாக அமைகின்றன. விண்டோ ஏர் கூலர்கள் ஜன்னலுக்கு அருகில் பொருத்தப்பட்டு, வெளியிலிருந்து நேரடியாகத் தூய காற்றை உள்ளிழுக்கின்றன, அதே சமயம் தரை இடத்தையும் சேமிக்க உதவுகின்றன.
இதையும் படிங்க:Portable AC மற்றும் 1 Ton Split AC? எல்லாத்திலையும் சிறந்தது எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
ஒரு கூலர் வாங்கும்போது முக்கியமாக பார்க்க வேண்டியது ரூம் சைஸ்க்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் மிகச் சிறிய கூலர் ரூமை சிறந்த கூலிங் தருவதில் சிரமப்படலாம், அதே சமயம் அதிகப்படியான அளவுள்ள கூலிங் வசதியான அனுபவத்தை அளிக்காமல் போகலாம்.
எனவே, ஒரு பெரிய வரவேற்பறைக்கோ அல்லது வெளிப்புறப் பகுதிக்கோ வலுவான கூலிங் தேவைப்பட்டால், டெசர்ட் கூலர் பொதுவாக சிறந்த தேர்வாகும். பெட்ரூம் , ஸ்டடி ரூம்கள் அல்லது சிறிய ரூம்களுக்கு, பர்சனல் மற்றும் டவர் கூலர்கள் அதிக நடைமுறைக்கு உகந்தவை. நீங்கள் தரை இடத்தை மிச்சப்படுத்தவும், சரியான காற்றோட்ட வசதியைப் பெறவும் விரும்பினால், விண்டோ கூலர் ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும்.