உங்களுக்கு பிடித்தபடி UPI ID, Paytm யில் உருவாக்கலாம் அது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா?

Updated on 06-Oct-2025

Paytm அதன் கஸ்டமர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது அதில் தங்களுக்கு பிடித்தபடி custom UPI ID உருவாக்கலாம் அதாவது தற்பொழுது இருக்கும் UPI ID ஈர்க்கும் வகையில் இல்லை மற்றும் ஞாபகத்தில் வைத்து கொள்வது சற்று சிரமம் ஆக இருக்கிறது நீங்கள் Paytm UPI id உங்களுக்கு பிடித்த வகையில் வைக்கலாம் ஆனால் GPay யில் கஸ்டமைஸ் UPI IDs உருவாக்கமுடியாது தற்பொழுது இருப்பதை ஆல்பபெட் உடன் நம்பர் இருக்கும், சரி வாங்க Paytm யில் Paytm UPI ID உருவாக்குவது எப்படி

Google Pay யில் இந்த கஸ்டம் UPI ID உருவாக்க முடியும் ?

Google Pay யில் இந்த கஸ்டம் ID அம்சம் இருக்கிறதா என்றால் கூகுள் பே இந்த அம்சம் கொண்டு வந்துள்ளது, ஆனால் இந்த அம்சனமனது தற்பொழுது பயன்படுத்த முடியாது இதுவரை அந்த அம்சம் தெரியவில்லை

UPI id

கஸ்டமைஸ் UPI ID உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பாக இருக்குமா?

UPI custom IDs உருவாக்குவதன் மூலம் உங்களின் ப்ரைவசி மற்றும் செக்யூரிட்டி பல மடங்கு பாதுகப்பாக இருக்கும், மேலும் ட்ரேன்செக்ஸன்களின் போது போன் நம்பர் அல்லது ஈமெயில் பகிர்வதற்குப் பதிலாக பயனர்கள் கஸ்டமைஸ் UPI id ஐடியைத் தேர்வுசெய்யலாம், இதன் மூலம் துன்புறுத்தல் மற்றும் உங்கள் நம்பரை தவறாக பயன்படுத்தம் அச்சுறுத்தலைத் தவிர்க்கலாம். இது கஸ்டமர்கள் தங்கள் பேங்க் மற்றும் கட்டண பரிவர்த்தனைகளுக்கு ஒரு தனி டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க உதவுகிறது.

இதையும் படிங்க:IRCTC முதல் UPI வரை அக்டோபர் 1 மாறும் புது ரூல் ஒரே நேரத்தில் 3 மூன்று மாற்றங்கள்

National Payments Corporation of India யின் (NPCI) பியர்-டு-பியர் மற்றும் பியர்-டு-மெர்ச்சண்ட் UPI பேமன்ட்க்கான ட்ரேன்செக்சன் லிமிட்டை உயர்த்தவும் இரட்டிப்பாக்கவும் முடிவு, மேலும் பாதுகாப்பான ட்ரேன்செக்சகளின் தேவையை மேலும் அதிகரிக்கிறது.

Paytm யில் UPI ID எப்படி உருவாக்குவது எப்படி?

  • Paytm-யில் இருந்து கஸ்டமைஸ் UPI ஐடியை உருவாக்க, முதலில் உங்கள் போனில் Paytm ஆப்பை திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு இடது பக்கத்தில் வரும் ப்ரோபைல் ஐகானைத் தட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, UPI மற்றும் பேமன்ட் செட்டிங்க்க்கு சென்று, பின்னர் “கஸ்டமைஸ் UPI ஐடியை முயற்சிக்கவும்” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு பேஜ் திறக்கும். நீங்கள் விரும்பும் ஐடியை இங்கே உள்ளிடலாம் அல்லது லிஸ்ட்டிலிருந்து எந்த ஐடியையும் தேர்ந்தெடுக்கலாம்.
  • பின்னர் உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். இந்த வழியில், உங்கள் ஐடி எளிதாக மாற்றப்படும்.
  • விரைவில் இந்த விருப்பம் PhonePe மற்றும் Google Pay-யிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :