ஸ்மார்ட் AC என்றால் என்ன? உங்கள் ஏசியை Wi-Fi உடன் கனெக்ட் செய்வது எப்படி

உங்கள் வீட்டுக்கு AC வாங்க நினைத்தால் மார்கெட்டில் பல AC வந்தாலும் Smart AC உங்கள் வீட்டை ஆக்கிடும் செம்ம கூல் இப்பொழுது ஸ்மார்ட் AC என்பது Wifi கனேக்ஷனுடன் வருகிறது வை ஸ்மார்ட் ஏசிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை உங்கள் போன் அல்லது டேப்லெட்டுடன் இணைக்கலாம். இந்த அம்சம் கொண்ட ஏசி மாடல்கள் 1-டன், 1.5-டன் மற்றும் 2-டன் கேப்பசிட்டியில் கிடைக்கின்றன, இவை சிறிய ரூம்கள் முதல் பெரிய ரூம்கள் வரை சிறந்த கூலிங் வழங்குகின்றன பவர் ரெட்டிங்கின் அடிப்படையிலும் தேர்வுகள் வேறுபடுகின்றன, அதாவது இந்த கேப்பசிட்டிக்கு 3-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் ரெட்டிங்க்களை கொண்ட ஸ்மார்ட் ஏசி மாடல்களை நீங்கள் காணலாம் மேலும் இந்த ஏசியை Wifi உடன் கனெக்ட் செய்வது என பார்க்கலாம் வாங்க.

உங்கள் ஸ்மார்ட் AC wifi உடன் கனேக்ட் செய்வது எப்படி ?

wifi AC (1)
  • முதலில், உங்கள் ஸ்மார்ட்போனை (அல்லது ஏசி மின் இணைப்புள்ள வேறு எந்த சாதனத்தையும்) வைஃபையுடன் இணைத்து, பின்னர் அந்த பிராண்டின் ஆப்பை உங்கள் போனில் அப்லோட் செய்ய வேண்டும்.
  • நீங்கள் ஆப்யில் உங்கள் அக்கவுண்டை உருவாக்க வேண்டும், இது Sign in செய்ய வேண்டும்
  • ஃபோனில் செயலி முழுமையாகத் திறந்தவுடன், நாம் ஃபோனை ஏதேனும் வைஃபையுடன் இணைக்கும்போது நமது சாதனத்தின் பெயரைக் கண்டுபிடிப்பதைப் போலவே, இந்தச் செயலியில் ‘எனது சாதனத்தைக் கண்டுபிடி’ (Find My Device) என்ற விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும், அதன் உதவியுடன் நீங்கள் ஏசியின் மாடலைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • அதன்பிறகு, அந்தச் செயலி உங்கள் ஏசி மாடல் தொடர்பான சில தகவல்களைக் கேட்கும். அவற்றை வழங்கிய பிறகு, உங்கள் ஏசி வைஃபை மற்றும் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்.

wifi உடன் கனெக்ட் செய்யும்போது இந்த சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்-

நீங்கள் ஸ்மார்ட் ஏசியை இணைக்கும் ஸ்மார்ட்போனும், உங்கள் ஏசி மாடலும் ஒரே வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சில ஸ்மார்ட் ஏசிகளை ஸ்மார்ட்போனுடன் கனேக்ஷனிர்க்கு , ஏசியிலேயே ஒரு பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது ஏசியுடன் வரும் ரிமோட்டிலும் ஒரு பட்டன் இருக்கும், அது கனெக்ஷன் செயல்முறையைத் தொடங்கும்.
ஒவ்வொரு ஏசி பிராண்டிற்கும் ஒரு தனி ஆப் உள்ளது, எனவே அந்தந்த பிராண்ட் குறிப்பிடும் ஆப்புடன் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Smart wifi AC என்ன என்ன இருக்கிறது பார்க்கலாம் வாங்க.

Haier 1.5 Ton 4 Star AI Climate Control Smart Split AC

ஹையர் பிராண்டின் இந்த 1.5 டன் ஏசியைப் பற்றிப் பேசுகையில், இது வெறும் இன்வெர்ட்டர் மட்டுமல்ல, டிரிபிள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட ஒரு மாடல் ஆகும். இதன் கம்ப்ரசர் அறை வெப்பநிலைக்கு ஏற்ப மாறுவதால், இது குறைந்த மின்சாரத்தையும் பயன்படுத்தும் திறன் கொண்டது. நடுத்தர அளவிலான அறைகளுக்கு ஏற்ற இந்த ஹையர் ஏசி, 4 ஸ்டார் பவர் ரேட்டிங்கில் கிடைக்கிறது. 160 சதுர அடி வரையிலான ரூமை பாஸ்ட்டாக கூலிங் , இதில் சூப்பர்சோனிக் கூலிங் வசதி உள்ளது. இது அதிகபட்ச வெப்பநிலையைக் கூட 10 வினாடிகளில் குறைத்துவிடும். ஹையரின் இந்த 1.5 டன் ஏசியில் ஃப்ராஸ்ட் செல்ஃப் கிளீன் தொழில்நுட்பம் உள்ளது. இதை அமேசானில் வாங்கலாம்.

இதையும் படிங்க ChatGPT Palm Trend: புதுசா வைரலாகும் இந்த கைரேக ட்ரெண்டிங் பயன்படுத்து முன் யோசிங்க ஏன்

Samsung 1.5 Ton 3 Star AI Inverter Smart Split AC

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த சாம்சங் மாடல், அதன் AI எனர்ஜி மோட் மூலம் 30% வரை ஆற்றல் சேமிப்பை வழங்கும் திறன் கொண்டது. இது அலெக்ஸா, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் பிக்ஸ்பி ஆகியவற்றுக்கான ஆதரவுடன் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக ஏசிகளில் தூசி வடிகட்டி இருக்கும் நிலையில், இந்த சாம்சங் ஏர் கண்டிஷனரில் பாக்டீரியா ரெசிச்டன்ட் பில்ட்டர் உள்ளது, இது உட்புற யூனிட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வளர்வதைத் தடுக்கிறது. தானியங்கிப் பிழை கண்டறியும் வசதியைக் கொண்ட இந்த சாம்சங் ஏசி, ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உங்களை எச்சரிக்கிறது இதன் விலை ரூ,36,490க்கு இதை அமேசானில் வாங்கலாம்

Panasonic 1.5 Ton 5 Star Premium Wi-Fi Inverter Smart Split AC

பானாசோனிக் பிராண்டின் ஸ்ப்ளிட் ஏசி ஆகும். இதில் வைஃபை இணைப்பு வசதி இருப்பதால், நீங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களுடன் ஏசியை இணைத்து, இந்த ஸ்மார்ட் ஏசியைக் கட்டுப்படுத்தவும் முடியும். இதில் உள்ள ‘ட்ரூ ஏஐ’ (True AI) அம்சம், உங்கள் வசதியைக் கருத்தில் கொண்டு குறைந்த எலெக்ட்ரிக் எடுக்கும் என்பதை உறுதி செய்கிறது. இதில் PM 0.1 ஃபில்டர் உள்ளது, இது டஸ்ட் ஏசிக்குள் நுழைவதைத் தடுக்கிறது, எனவே நீங்கள் சுத்தமான மற்றும் புத்துணர்ச்சியான கூலிங் காற்றைப் பெறலாம். இந்த பானாசோனிக் ஏர் கண்டிஷனரில் ‘ஷீல்டுப்ளூ+’ (ShieldBlu+) பினிஷ் உள்ளது, இது டஸ்ட் யூனிட்டில் லீக் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதை அமேசானில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :