Nano Banana at whatsApp srinivas
கூகிளின் Gemini நானோ பனான இப்போதெல்லாம் இண்டேன்ட் முழுவதும் வைரலாகி வந்தது . எல்லோரும் இதைப் பயன்படுத்தி பல்வேறு போட்டோக்களை உருவாக்குகிறார்கள். எல்லோரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த இமேஜ் ஜெனரேட்டர் மற்றும் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தனித்துவமான போட்டோவை உருவாக்கலாம். இதுவரை, மக்கள் தங்கள் சொந்த 3D பொம்மை AI போட்டோக்கள் மற்றும் AI சேலை போட்டோக்களை அதன் உதவியுடன் பகிர்ந்துள்ளனர். இப்பொழுது அதே போல Perplexity மூலம் WhatsApp bot மூலம் Nano Banana போட்டோ உருவாக்கலாம், அது எப்படி உருவாக்குவது பற்றிய முழு விவரம் பார்க்கலாம்
கூகிள் ஜெமினியின் நானோ பனான டூல் , பெர்ப்ளெக்ஸிட்டியின் வாட்ஸ்அப் சாட்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் லிங்க்ட்னில் பதிவிட்டுள்ளார். இப்போது, மக்கள் வாட்ஸ்அப் வழியாக நானோ பனான பயன்படுத்தி போட்டோவை எளிதாக உருவாக்க முடியும். ஸ்ரீனிவாஸ் ஒரு சிறிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு பயனர் Perplexity Chatbot ஒரு போட்டோ தன்னை வழுக்கை விழச் செய்யச் சொல்கிறார். பாட் சில நொடிகளில் அறிவுறுத்தலின் படி போட்டோ உருவாக்குகிறது.
இது நானோ பனான பயன்படுத்துவதற்கு ஜெமினி ஆப் தேவையில்லை என்பதையும் குறிக்கிறது. வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி போட்டோவை உருவாக்க முடியும். வாட்ஸ்அப் வழியாக நானோ WhatsApp பயன்படுத்துவது மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறுகிறார்.
இதையும் படிங்க Amazon VS Flipkart: ஒரே நாளில் விற்பனை எங்கு எந்த பொருட்களில் அதிக ஆபர் தெருஞ்சிகொங்க